தீபாவளி கொண்டாட்டம்: புகைமண்டலமான சென்னை – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னையில் தீபாவளி பண்டிகையையொட்டி வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் சென்னையே புகை மண்டலமானது. 

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பலரும் புத்தாடைகள் அணிந்தும், இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தீபாவளி கொண்டாடினர். இந்நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் நகர் முழுவதும் புகைமண்டலமானது. 

அம்பத்தூர், அண்ணாநகர், வில்லிவாக்கம், கிண்டி, வேளச்சேரி, நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை என நகரின் பல பகுதிகளிலும் புகை மண்டலம் சூழ்ந்தது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருந்தனர். 

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMid2h0dHBzOi8vd3d3LmRpbmFtYW5pLmNvbS9hbGwtZWRpdGlvbnMvZWRpdGlvbi1jaGVubmFpL2NoZW5uYWkvMjAyMi9vY3QvMjQvZGl3YWxpLWNlbGVicmF0aW9uLXNtb2t5LWNoZW5uYWktMzkzNzczNi5odG1s0gEA?oc=5