விரிவாக்கம் செய்யப்படும் சென்னை பெருநகர பகுதி.. 4 மாவட்டத்தில் இருந்து இணைக்கப்படும் இடங்கள் என்னென்ன ? – Kalaignar Seithigal

சென்னைச் செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி தாலுகாக்களைச் சேர்ந்த 550 கிராமங்களும் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுக்காவில் இருந்து 44 கிராமங்களும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் தாலுகாக்களில் இருந்து 335 கிராமங்களும் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு, திருப்போரூர், திருக்கழுகுன்றம் மற்றும் வண்டலூர் தாலுகாக்களைச் சேர்ந்த 296 கிராமங்களும் சென்னை பெருநகர பகுதிகளில் இணைக்கப்படுவதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் அந்த பகுதியில் நடக்கும் பணிகள் முறைப்படுத்தப்படுவதுடன் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமத்தால் உருவாக்கப்படும். அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMirgFodHRwczovL3d3dy5rYWxhaWduYXJzZWl0aGlnYWwuY29tL3RhbWlsbmFkdS8yMDIyLzEwLzIzL3RoZS10YW1pbC1uYWR1LWdvdmVybm1lbnQtdG9kYXktaXNzdWVkLWFuLW9yZGluYW5jZS10by1leHBhbmQtdGhlLWNtZGEtdG8tNTkwNC1zcS1rbS1mcm9tLXRoZS1leGlzdGluZy0xMTg5LXNxLWttLWFyZWHSAQA?oc=5