சென்னை ஜூனியர் கால்பந்து லீக் எப்.சி., மெட்ராஸ் அபாரம் – Dinamalar

சென்னைச் செய்திகள்
Advertisement

சென்னை, சென்னை ஜூனியர் கால்பந்து ‘லீக்’ போட்டியில், எப்.சி., மெட்ராஸ் அணி, கிரேட் கோல்ஸ் அணியை இரு போட்டிகளில் தோற்கடித்தது.

படூரில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லுாரியில், சென்னை ஜூனியர் கால்பந்து ‘லீக்’ போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில், சென்னையில் முன்னிலையில் உள்ள எப்.சி., – கிரேட் கோல்ஸ், மெட்ராஸ் எப்.சி., – ஆசுரா எப்.சி., – எஸ்.பி.எப்.ஏ., – மஹோகனி எப்.சி., உள்ளிட்ட ஆறு கிளப் அணிகள் பங்கேற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் ஐந்து போட்டிகள் வீதம், நவ., 13ம் தேதி வரை வார இறுதி நாட்களில் மட்டும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதில், 13 மற்றும் 15 வயதுக்குட்பட்ட இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இரு தினங்களுக்கு முன் நடந்த ‘லீக்’ போட்டிகளில், 13 வயதில், எப்.சி., மெட்ராஸ் மற்றும் கிரேட் கோல்ஸ் அணிகள் மோதின.அதில், 10 – 0 என்ற கோல் கணக்கில் எப்.சி., மெட்ராஸ் அணி வெற்றி பெற்றது.

மற்றொரு போட்டியில், சபரி பாஷா கால்பந்து அகாடமி அணி, 3 – 1 என்ற கோல் கணக்கில் மஹோகனி எப்.சி., அணியை தோற்கடித்தது.

அதேபோல், 15 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியிலும் எப்.சி., மெட்ராஸ் அணி, 5 – 0 என்ற கோல் கணக்கில், கிரேட் கோல்ஸ் அணியை வீழ்த்தியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Dinamalar iPaper


180 இடங்களில் விபத்து

முந்தய


மாநில வலு துாக்கும் போட்டி சென்னையை சேர்ந்த 30 பேர் தகுதி

அடுத்து
வாசகர் கருத்துSource: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFtYWxhci5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP2lkPTMxNTQxODjSAQA?oc=5