சென்னை, கிண்டியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் வீரராகவ ராவ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து நாளை (28ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி  வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் 2 மதியம் மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில்  8ம் வகுப்பு, 10ம் வகுப்பு,  12ம் வகுப்பு,  ஐ.டி.ஐ , டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் எதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வி தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MDk0MzDSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgwOTQzMC9hbXA?oc=5