தொடங்கியது வடகிழக்கு பருவமழை : சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளின் நிலை என்ன? களநிலவரம் இதோ! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
வடகிழக்கு பருவமழை தொடங்கி நிலையில், சென்னையில் முதற்கட்ட மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் முடியும் நிலையில் உள்ளது. இருப்பினும் இரண்டாம் கட்ட பணிகள் குறைந்த அளவிலேயே நிறைவு பெற்றுள்ளது. 

சென்னை மாநகராட்சி முழுவதும் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. சிங்கார சென்னை 2.0 திட்டம் மற்றும் வெள்ள நிவாரண நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் முன்னூரிமை 1 (Priority 1) மற்றும் முன்னூரிமை 2 (Priority 2) என பிரிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

சிங்காரச் சென்னை 2.0 திட்டம் – (முதல் பகுதி  மற்றும் இரண்டாம் பகுதி)

நிதி ஒதுக்கீடு – 277.04 கோடி

மொத்த நீளம் – 60.83 கி.மீ

சிங்காரச் சென்னை 2.0-பகுதி 1

Priority 1 – 97 % நிறைவு

Priority 2 – 16 % நிறைவு

சிங்காரச் சென்னை 2.0 –  பகுதி 2

Priority 1 – 94.19 % நிறைவு

Priority 2 – 12.12 % நிறைவு

வெள்ள நிவாரணத்திட்டம் 

மொத்த நீளம் – 295.73

நிதி ஒதுக்கீடு – 107.57

Priority 1 – 81.94 %

Priority 2 – 13.96 %

உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டம்

நிதி ஒதுக்கீடு – 27.21 கோடி

மொத்த நீளம் – 10 கி.மீ

பணிகள் நிறைவு – 84.96%

இதையும் படிங்க: களைக்கட்டிய ஆவின் தீபாவளி விற்பனை..கடந்த ஆண்டை விட 40% அதிகம்..

உலக வங்கி நிதி 

நிதி ஒதுக்கீடு – 120 கோடி

மொத்த நீளம் – 44.88

பணிகள் நிறைவு – 95.80 %

மூலதன மானிய நிதி –

நிதி ஒதுக்கீடு – 8.26 கோடி

மொத்த நீளம் – 1.05 கி.மீ

பணிகள் நிறைவு – 97.8%

இதை தவிர்த்து, ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியின் கீழ் கொசஸ்தலையாறு வடிநில பகுதிகளில் ரூபாய் 3,220 கோடியில், 769 கி.மீ நீளத்திற்கும், ஜெர்மன் பன்னாட்டு வங்கி நிதி உதவியின் கீழ், கோவளம் வடிநில பகுதிகளில் ரூபாய் 1,714 கோடியில் 360 கி.மீ நீளத்திற்கும் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் கோவளம், கொசஸ்தலையாறு திட்டங்களை முடிக்க 3 ஆண்டுகள் வரை கால அவகாசம் உள்ளது. சிங்கார சென்னை மற்றும் வெள்ள நிவாரண நிதியில் முதற்கட்ட பணிகள் மட்டுமே முடியும் நிலையில் உள்ளது. இத்திட்டத்தில் இரண்டாம் கட்ட பணிகள் மிகவும் குறைவான அளவில்தான் நிறைவு பெற்றுள்ளது. இதனால் மழை நேரங்களில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)

சென்னை

சென்னை

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiX2h0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9uZXdzL2NoZW5uYWkvY2hlbm5haS1zdG9ybS13YXRlci1kcmFpbmFnZS13b3Jrcy1pcy10by1sYXRlLTgyNzE0My5odG1s0gFjaHR0cHM6Ly90YW1pbC5uZXdzMTguY29tL2FtcC9uZXdzL2NoZW5uYWkvY2hlbm5haS1zdG9ybS13YXRlci1kcmFpbmFnZS13b3Jrcy1pcy10by1sYXRlLTgyNzE0My5odG1s?oc=5