வடகிழக்கு பருவமழை எதிரொலி : சென்னையில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை இருக்கும் என வானிலை எச்சரித்ததுள்ள நிலையில், மாநகராட்சி சார்பில் பல்வேறு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், சென்னையில் இன்று அதிகாலை முதல் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பருவ மழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  அதன் விவரம் பின்வருமாறு:-

*சென்னையில் மொத்தம் 16 சுரங்கப்பாதைகள் சென்னை மாநகராட்சியாலும், 6 சுரங்கப்பாதைகள் நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற, 153 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

*மரங்கள் விழுந்தால் உடனடியாக அகற்ற 238 பவர் ரம்பங்கள், இரவு நேர குழுக்கள், 20288 மரங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதிக பாரம் உள்ள மரங்களின் கிளைகள் அகற்றப்பட்டுள்ளன.

*109 மீட்பு படகுகள், 101 மருத்துவ குழுக்கள் மற்றும் சமுதாய நலக்கூடங்கள், பள்ளி வளாகங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட 169 இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

*1500 பேருக்கு ஒரே நேரத்தில் உணவு சமைத்து வழங்கும் வகையில் பொது சமயற்கூடங்கள் உள்ளன.

அடுத்த 3 மணிநேரம் இந்த 12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கொட்டித்தீர்க்கப்போகும் மழை : எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா?

*15 மண்டலங்களிலும், தாழ்வான பகுதிகளில் 503 மோட்டார் பம்புகள்  மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.

*24 மணி நேரமும் செயல்படும் 1913 என்ற உதவி எண்ணுடன் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

*அவசரகால சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொண்ட குழுவினர் மழையின்போது ஏற்படும் மின்கசிவைத் தடுக்க தெரு விளக்குகள், பில்லர் பாக்ஸ்கள் உள்ளிட்டவற்றை சோதனை செய்யத் தொடங்கியுள்ளனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMidGh0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9uZXdzL2xpdmUtdXBkYXRlcy9ub3J0aGVhc3QtbW9uc29vbi1wcmVjYXV0aW9ucy1mb3ItcmFpbi1ieS1jaGVubmFpLWNvcnBvcmF0aW9uLTgyNzk3MS5odG1s0gEA?oc=5