கனமழை | சென்னை உட்பட 9 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை | Heavy rain Today is a holiday for 9 district schools including Chennai – hindutamil.in – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனிடையே, நேற்று இரவு முதல் சென்னையின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இரவுநேரத்தில் தொடர்ந்து பல மணிநேரங்கள் கனமழை விடாது பெய்தது. கனமழையின் காரணமாக சாலையின் ஆங்காங்கே நீர் தேங்கியிருப்பதால் நடந்து பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், இன்று (2.11.22) மழையின் காரணமாக 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, வேலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMie2h0dHBzOi8vd3d3LmhpbmR1dGFtaWwuaW4vbmV3cy90YW1pbG5hZHUvODkxMTMzLWhlYXZ5LXJhaW4tdG9kYXktaXMtYS1ob2xpZGF5LWZvci05LWRpc3RyaWN0LXNjaG9vbHMtaW5jbHVkaW5nLWNoZW5uYWkuaHRtbNIBAA?oc=5