அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னையில் இங்கெல்லாம் மழை – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னையில் கடந்த இரண்டு நாளாக தொடர்ந்து பெய்து கொண்டிருந்த மழை, இன்று ஓரளவுக்கு இடைவேளை விட்டிருந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னையில் இங்கெல்லாம் மழை பெய்யும் என்று  வானிலை மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது போல, அரை மணி நேரத்துக்கு முன்பு, சென்னையில்  வடபழனி, மயிலாப்பூர், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் லேசான தூறல் முதல் பலத்த மழை வரை பெய்திருக்கும் நிலையில், மாலை 5.30 மணியளவில் சென்னை வானிலை ஆய்வு மையம் சென்னை உள்ளிட்ட இடங்களில் எங்கெல்லாம் மழை பெய்யும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க.. பாகிஸ்தானில் அச்சு அசல் ரஜினிகாந்த் போல ஒருவர்.. அவருக்கு ஒரு ஆசை!

அதாவது, சென்னையில் எழும்பூர், பெரம்பூர், புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, ஆலந்தூர், மதுராந்தகம், மதுரவாயல், உத்திரமேரூர் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

அதுபோல, அடுத்த 2 மணி நேரத்திற்குள்ளாக சென்னையின் புறநகர்ப் பகுதிகளான பல்லாவரம், குன்றத்தூர், தாம்பரம் பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

சென்னையில், செய்யூர், கிண்டி, மாம்பலம், மயிலாப்பூர், திருவொற்றியூர், வேளச்சேரி, குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.

அதுபோல, செங்கல்பட்டு, சோழிங்கநல்லூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், திருவள்ளூர் பகுதிகளிலும் மழை பெய்யும் என்று அறிவித்திருந்தது.
 

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMidmh0dHBzOi8vd3d3LmRpbmFtYW5pLmNvbS90YW1pbG5hZHUvMjAyMi9ub3YvMDMvaXQtd2lsbC1yYWluLWV2ZXJ5d2hlcmUtaW4tY2hlbm5haS13aXRoaW4tdGhlLW5leHQtMi1ob3Vycy0zOTQyOTI5Lmh0bWzSAQA?oc=5