கமலஹாசன் பிறந்தநாள் ஸ்பெஷல்: சென்னையில் இந்த வாரம் வரவிருக்கும் நிகழ்ச்சிகள் – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

சென்னையில் இந்த வாரம் ஸ்டாண்ட்-அப் காமெடிகள், பிரதீக் குஹாத் லைவ் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் மக்களை மகிழ்விக்க வருகிறது. கமல்ஹாசனின் பிறந்தநாள் வரும் வாரம் என்பதால் அவரது பல்வேறு பாடல்களுடன் இசைக் கச்சேரியும் நடக்கவிருக்கிறது.

நவம்பர் மாதத்தின் முதல் வாரம், சில அற்புதமான இசை மற்றும் ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சிகளுக்கு தயாராகுங்கள். நிகழ்ச்சிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் மாரத்தான்

சென்னையின் ‘தமிழ் பிரிண்ட்ஸ் & ஈவென்ட்ஸ்’ பிரமாண்டமான மெட்ராஸ் தின கொண்டாட்டத்தைத் தொடர்ந்து, ‘மாடர்ன் மெட்ராஸ் மாரத்தான்’ நடத்துகிறது. இந்த மாரத்தான் சென்னையின் வரலாற்றையும் உணர்வையும் கொண்டாட மக்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நவம்பர் 6-ம் தேதி பெசன்ட் நகரில் தொடங்கும் மரத்தானிற்கு மக்கள் தயாராகுங்கள்.

பிரதீக் குஹாத் நேரலை

உலக அளவில் அங்கீகாரம் பெற்ற பாடகர் மற்றும் பாடலாசிரியரான பிரதீக் குஹாத் தனது சுற்றுப்பயணத்துடன் நம்ம சென்னைக்கு வரவிருக்கிறார். ‘காதலர்கள் செய்யும் வழி’ என்ற ஆல்பம் மூலம் காதல் மற்றும் நட்பின் கண்ணோட்டத்தில் ஆழ்ந்த பாசத்தை ஆராய்கிறது. நவம்பர் 5 ஆம் தேதி இரவு 8 மணி முதல் தனது ரசிகர்களை மகிழ்விக்க குஹாத் தயாராகிவிட்டார். சரி, நேரடி நிகழ்ச்சிக்காக இந்த சனிக்கிழமை ஃபீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் இந்நிகழ்ச்சியைக் காணலாம்.

நகைச்சுவை இரவுகள்

ஸ்டாண்ட்-அப் காமெடியன் சொக்கலிங்கம் தனது தமிழ் ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியை நவம்பர் 6 அன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள ‘தி ஸ்டேஜ்’இல் நடத்தவிருக்கிறார். இந்த வார இறுதியில் நீங்கள் ஒரு இனிமையான மாலைப் பொழுதைக் கழிக்க விரும்பினால், வேடிக்கையான கதைகளைக் கேட்க விரும்பினால், இந்த நிகழ்ச்சியைக் கண்டு மகிழலாம். இரவு 7 மணி முதல் இந்நிகழ்ச்சி தொடங்கும்.

கமல்ஹாசனின் வெற்றிப் பாடல்களின் பின்னணி

பிரபல திரைப்பட நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் இந்த வார இறுதியில் வருவதால் அதற்கேற்ப நிகழ்ச்சிகள் திட்டமிடப்படுகிறது. பிரபல இசையமைப்பாளர் ராஜேஷ் வைத்தியா, தனது இசைக்குழுவுடன் இணைந்து கமல்ஹாசனின் இசை ஹிட்களை பாடவுள்ளார். நவம்பர் 5 ஆம் தேதி மாலை 6:30 மணி முதல் தி நகரில் உள்ள வாணி மஹாலில் இந்த நிகழ்ச்சியைக் காணலாம்.

நகைச்சுவை நடிகர்கள் ஒன்று சேரும்போது..

நகைச்சுவை நடிகர்களான சியாமா ஹரிணி, யோகேஷ் ஜகந்நாதன், அண்ணாமலை, பிரவேஷிகா குமார், ஆதித்ய பத்ரிநாத் நாராயணன் மற்றும் சுந்தர் ஆகியோர் இடம்பெறும், ‘நியூ மெட்டீரியல் நைட்ஸ்’ ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

உங்களுக்கு பிடித்த நகைச்சுவை நடிகர்கள் அனைவரும் நவம்பர் 6 அன்று மாலை 4:30 மணி முதல் மயிலாப்பூரில் உள்ள தி சவேராவில் உள்ள சவுத் ஆஃப் காமெடி கிளப்பில் உங்களை மகிழ்விக்க வருவார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMicGh0dHBzOi8vdGFtaWwuaW5kaWFuZXhwcmVzcy5jb20vZW50ZXJ0YWlubWVudC9jaGVubmFpLXRoaXMtd2Vlay1vcmdhbmlzZXMtZXZlbnRzLW9uLWthbWFsaGFzc2FuLWJpcnRoZGF5LTUzNTE1My_SAQA?oc=5