சென்னை: அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு விடுமுறை – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை தொடர்ந்து சென்னையில் கடந்த 31-ந்தேதி முதல் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த கனமழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

பட்டாளம், புளியந்தோப்பு, மண்ணடி, வியாசர்பாடி, கலெக்டர் அலுவலகம் அருகில் என வடசென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கியது. ஆனாலும் தேங்கிய மழைநீர் ராட்சத பம்புகள் மூலம் வெளியேற்றும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில், சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரில் மின்சாரம் பாய்ந்த நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Related Tags :

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMicWh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vTmV3cy9TdGF0ZS9jaGVubmFpLWFzaG9rLW5hZ2FyLWdvdnQtZ2lybHMtaGlnaGVyLXNlY29uZGFyeS1zY2hvb2wtaGFzLWhvbGlkYXktODI4NDY20gEA?oc=5