சென்னை ஊரப்பாக்கத்தில் ஃபிரிட்ஜ் வெடித்து 3 பேர் பலி – தினமணி

சென்னைச் செய்திகள்

கோப்புப்படம்

சென்னை ஊரப்பாக்கத்தில் மின்கசிவு காரணமாக குளிர்பதனப் பெட்டி வெடித்து மூச்சுத் திணறி 3 பேர் உயிரிழந்தனர். 

சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் கோதண்டராமன் நகரில் உள்ள கிரிஜா என்பவரது வீட்டில் குளிர்பதனப் பெட்டி வெடித்து விபத்து ஏற்பட்டதில்
கிரிஜா (63), அவரது தங்கை ராதா (55), உறவினர் ராஜ்குமார் (48) ஆகியோர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடல்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiU2h0dHBzOi8vd3d3LmRpbmFtYW5pLmNvbS90YW1pbG5hZHUvMjAyMi9ub3YvMDQvY2hlbm5haS1hY2NpZGVudC0zLWRlYWQtMzk0MzQyMS5odG1s0gEA?oc=5