பரவுது மெட்ராஸ் – ஐ – Dinamalar

சென்னைச் செய்திகள்
Advertisement

சென்னை, சென்னையில் ‘மெட்ராஸ் ஐ’ அதிகரித்து வருவதாக, ‘டாக்டர் அகர்வால்ஸ்’ கண் மருத்துவமனையின் டாக்டர் கலாதேவி தெரிவித்தார்.

இது குறித்து, டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் பிரிவு மண்டல தலைவர் டாக்டர் கலாதேவி கூறியதாவது:

சென்னையில் ‘மெட்ராஸ் ஐ’ என்ற வெண்படல அழற்சி நோய் வேகமாக பரவி வருகிறது. கண்ணில் இருந்து சுரக்கும் திரவங்களின் வழியே மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடியது. குறிப்பாக, குழந்தைகள், சிறார்கள் மத்தியில் அதிகளவில் பரவி வருகிறது.

கண் எரிச்சல், நீர் வடிதல், கண் சிவத்தல், ஒட்டிக்கொள்கிறவாறு கண்ணில் இருந்து அழுக்கு வெளியேற்றம், வெளிச்சத்தை பார்க்க கூச்சம் ஆகியவை அறிகுறிகள். இந்த வைரஸ் தொற்று, சில நோயாளிகளுக்கு கண் வீக்கம் மற்றும் அழற்சியை ஏற்படுத்துகிறது.

உரிய சிகிச்சை அளிக்காவிட்டால், தீவிரமான பிரச்னையாக மாறக்கூடும். சுயமாக மருந்துகள் பயன்படுத்துவதையும், ‘ஓடிசி’ என்ற கண் சொட்டு மருந்துகள் உபயோகப்படுத்துவதை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

வெண்படல அழற்சியால் பாதிக்கப்படும் கான்டாக்ட் லென்ஸ் அணிவோர், பழைய லென்ஸ்களை தவிர்த்து, டாக்டரால் பரிந்துரைக்கப்படும் லென்ஸ்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும், கண்களில் இருந்து வெளியேறும் திரவத்தை துடைக்க, ‘டிஸ்ஷு’ பேப்பர் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Dinamalar iPaper


வாலிபருக்கு 272 நாள் சிறை

முந்தய


பள்ளி மாணவி மீட்பு இளைஞருக்கு ‘போக்சோ’

அடுத்து








வாசகர் கருத்து



Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFtYWxhci5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP2lkPTMxNjE0NDXSAQA?oc=5