கனமழை முன்னெச்சரிக்கை | நவ.9-க்குள் முடிக்க வேண்டிய பணிகள் – சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவு – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் அடுத்த கனமழை 9-ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 31-ம் தேதி முதல் 3 வரை வரை சென்னையில் கனமழை பெய்தது. குறிப்பாக, சென்னையின் ஒரு சில பகுதிகளில் 48 மணிநேரத்திற்குள் 15 செ.மீ. முதல் 35 செ.மீ. வரை மழை பெய்தது.

இந்நிலையில், சென்னையில் அடுத்த கனமழை வரும் 9-ம் தேதி பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த 3 நாட்களில் பல்வேறு பணிகளை முடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். இதன் விவரம்:

  • புதியதாக மழைநீர் வடிகால் கட்டப்பட்டுள்ள இடங்களில் முடிக்கப்படாத வண்டல் வடிகட்டி தொட்டிகளை உடனடியாக அமைக்க வேண்டும்.
  • ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள வண்டல் வடிகட்டி தொட்டிகளில் சேர்ந்துள்ள வண்டல்களை அகற்ற வேண்டும்.
  • வண்டல் வடிகட்டி தொட்டி மற்றும் மழைநீர் வடிகாலுடன் இணைக்கும் குழாய் பொருத்தப்படாத இடங்களில் குழாய் பொருத்த வேண்டும்.
  • குழாய் பொருத்த முடியாவிட்டால் தற்காலிக ஏற்பாடாக துளை இட வேண்டும்.
  • வண்டல் வடிகட்டி தொட்டிகளில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்.
  • சாலைகளில் எற்பட்டுள்ள சிறு பள்ளங்களை உடனடியாக சீர்செய்ய வேண்டும்.
  • சாலை மற்றும் தெருக்களில் தேங்கியுள்ள திடக்கழிவுகளை அகற்றும் தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டும்.
  • மழையின் நிறுத்தப்பட்ட மழைநீர் வடிகால் இணைப்புகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiaGh0dHBzOi8vd3d3LmhpbmR1dGFtaWwuaW4vbmV3cy90YW1pbG5hZHUvODkyNjY4LWNvbXBsZXRlLWJhbGFuY2Utd29ya3MtYmVmb3JlLTktbm92ZW1iZXItaW4tY2hlbm5haS5odG1s0gEA?oc=5