மெட்ராஸ் -ஐ : சென்னையில் 200 சிறப்பு மருத்துவ முகாம்கள் – Top Tamil News

சென்னைச் செய்திகள்

 சென்னையில் இன்று 200 இடங்களில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெறுகின்றன.   சென்னை மாவட்டத்தில் மழைக்கால நோய்களுக்காக இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.   இதற்காக இன்று 200 இடங்களில் இலவச சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.   இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது . 

சென்னையில் மழைக்கால நோயான மெட்ராஸ் வேகமாக பரவி வருகிறது இதை தடுக்க இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

 சென்னையில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் மெட்ராஸ் ஐ உள்பட பல்வேறு நோய்கள் தொற்றும் அபாயம் இருப்பதால் மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க அரசு முன் வந்திருக்கிறது.   இதற்காக மக்கள் நல்வாழ்வு துறையும் மாநகராட்சியும் இணைந்து சென்னையில் மருத்துவ முகாம்கள் நடத்தும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.

mm

 அதன்படி இன்றைக்கு ஒவ்வொரு வார்டிலும் ஒரு மருத்துவ முகாம் வீதம் சென்னை மாவட்டத்தில் 200 வார்டுகளிலும் 200 இடங்களிலும் முகாம் நடக்கிறது.  இந்த சிறப்பு முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது .  முகாம்களில் மருத்துவர்கள் ,செவிலியர்கள், உதவியாளர்கள் இருப்பார்கள்.  200 வருடங்களிலும் எந்தெந்த இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது என்கிற விவரம் அனைத்து மண்டலங்களிலும் வார்டு அலுவலகங்களிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றன.

 சென்னையில் மழைக்கால நோயான மெட்ராஸ் ஐ வேகமாக பரவி வருகிறது.  மருத்துவ முகாம்களில் கண் வலி, காய்ச்சல், சளி இருமல் , வயிற்றுப்போக்கு,  சேற்றுப்புண் உள்ளிட்டு வியாதிகள் தொடர்பான பரிசோதனை செய்து மருந்துகளும் வழங்கப்படுகின்றன.
 

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiaWh0dHBzOi8vd3d3LnRvcHRhbWlsbmV3cy5jb20vdGhhbWl6aGFnYW0vTWFkcmFzLUktMjAwLXNwZWNpYWxpemVkLW1lZGljYWwtY2FtcHMtaW4tQ2hlbm5haS9jaWQ5MDgzMjI0Lmh0bdIBAA?oc=5