முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை ஏரிகளில் இருந்து கூடுதல் நீர் வெளியேற்றம் – Tamil Murasu

சென்னைச் செய்திகள்

சென்னை: தென்­மேற்கு வங்­கக்­க­டல் பகு­தி­யில் இலங்கை கடற்­க­ரையை ஒட்டி புதிய காற்­ற­ழுத்த தாழ்வு பகுதி இன்று உரு­வாக வாய்ப்­புள்­ள­தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது. இதை­ய­டுத்து தமி­ழ­கத்­தில் பத்து மாவட்­டங்­க­ளுக்கு கன­ம­ழைக்­கான ஆரஞ்சு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

அக்­காற்­ற­ழுத்த தாழ்­வுப் பகுதி வட­மேற்­குத் திசை­யில் தமி­ழ­கம், புதுவை நோக்கி நக­ரக்­கூ­டும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்­கு­நர் செந்­தா­மரை கண்­ணன் தெரி­வித்­துள்­ளார்.

இத­னால் பெரும்­பா­லான மாவட்­டங்­களில் மழை பெய்ய வாய்ப்­புள்­ள­தால் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை துரி­தப்­ப­டுத்த வேண்­டும் என மாவட்ட ஆட்­சி­யர்­க­ளுக்கு அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது.

தென்­மேற்கு வங்கக் கடல், அத­னை­யொட்­டிய கடற்­கரை பகுதி­களில் நில­வும் வளி­மண்­டல கீழ­டுக்கு சுழற்சி கார­ண­மாக இன்று பெரும்­பா­லான இடங்­களில் மித­மான மழை­யும் என எதிர்­பார்க்­கப்­படு­கிறது. சென்னை மட்­டு­மல்­லா­மல் டெல்டா, தென் மாவட்­டங்­களில் பர­வ­லான மழைப்­பொ­ழிவு இருக்­கும் என வானிலை மையம் கூறி­யுள்­ளது.

இந்­நி­லை­யில், சென்­னை­யின் நீர் ஆதா­ரங்­க­ளாக உள்ள ஏரி­களின் நீர்­மட்­டத்­தைக் குறைக்க வேண்­டும் என நீர்­வள ஆதா­ரத் துறைக்கு அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது.

சென்னை மாந­க­ராட்­சி­யின் வேண்­டு­கோளை ஏற்று சென்னை, புற­ந­கர்ப் பகு­தி­களில் உள்ள ஏரி­களின் நீர்­மட்­டத்­தைக் குறைக்­கும் நட­வ­டிக்­கை­கள் தொடங்­கப்­பட்­டுள்­ளன.

கடந்த 2015ஆம் ஆண்டு சென்­னை­யின் புற­ந­கர் பகு­தி­க­ளி­லி­ருந்து வெளி­யே­றிய நீரால், ஒட்­டு­மொத்த சென்னை மாந­க­ர­மும் மழை, வெள்­ளத்­தில் மூழ்­கிப்­போ­னது.

அது­போன்ற சூழல் மீண்­டும் ஏற்­ப­டு­வ­தைத் தடுக்­கும் வகை­யில் ஏரி­க­ளின் நீர்­மட்­டத்­தைக் குறைக்­கு­மாறு மாந­க­ராட்சி சார்­பில் நீர்­வள ஆதா­ரத் துறைக்கு வேண்­டு­கோள் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

புற­ந­கர்ப் பகு­தி­யில் உள்ள ஏரி­கள் மட்­டு­மல்­லா­மல், சென்னை மாந­க­ரப் பகு­திக்­குள் உள்ள கொரட்­டூர், மாத­வ­ரம், கொளத்­தூர், வேளச்­சேரி, ஆதம்­பாக்­கம் ஏரி­களின் நீர் அள­வை­யும் குறைத்து வைக்­கு­மாறு நீர்­வள ஆதா­ரத்­துறைக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து, புழல், செம்­பரம்­பாக்­கம், பூண்டி ஏரி­களில் இருந்து குறிப்­பிட்ட அள­வி­லான நீர் தொடர்ந்து வெளி­யேற்­றப்படுகிறது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiQWh0dHBzOi8vd3d3LnRhbWlsbXVyYXN1LmNvbS5zZy90YW1pbG5hZHUvc3RvcnkyMDIyMTEwOS05OTMyMy5odG1s0gEA?oc=5