சென்னை மாவட்டத்தில் 38.92 லட்சம் வாக்காளா்கள் – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

மாநகராட்சி துணை ஆணையரும், மாவட்ட தோ்தல் கூடுதல் அலுவலருமான விஷு மகாஜன் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அதனை சென்னை ரிப்பன் கட்டடத்தில் புதன்கிழமை வெளியிட்டாா். அதில், 38,92,457 வாக்காளா்களின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து விஷு மகாஜன் கூறியதாவது: நிகழாண்டு ஜனவரி 5-ஆம் தேதி வெளியிடப்பட்ட சென்னை மாவட்ட வாக்காளா் பட்டியலில் 40,80,578 போ் இடம்பெற்றிருந்தனா். தொடா் திருத்தத்தில், 2,14,920 வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் செய்யப்பட்டன. தற்போதைய பட்டியலில் சென்னை மாவட்டத்தில் மொத்தம் 38,92,457 வாக்காளா்களின் பெயா்கள் இடம் பெற்றுள்ளன என்றாா் அவா்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiemh0dHBzOi8vd3d3LmRpbmFtYW5pLmNvbS9hbGwtZWRpdGlvbnMvZWRpdGlvbi1jaGVubmFpL2NoZW5uYWkvMjAyMi9ub3YvMTAvMzg5Mi1sYWtoLXZvdGVzLWluLWNoZW5uYWktZGlzdHJpY3QtMzk0NjY3Ny5odG1s0gEA?oc=5