கனமழை: சென்னை, 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை – தினமணி

சென்னைச் செய்திகள்

கோப்புப்படம்

கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை உள்பட 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (நவ.11) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சென்னை மாவட்ட ஆட்சியா் எஸ்.அமிா்தஜோதி வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

அதன்பேரில், சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (நவ.11) மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவாரூா், தஞ்சாவூா், நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் தெரிவித்துள்ளனா்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMijAFodHRwczovL3d3dy5kaW5hbWFuaS5jb20vdGFtaWxuYWR1LzIwMjIvbm92LzExL2hlYXZ5LXJhaW4tdG9kYXktaXMtYS1ob2xpZGF5LWZvci1zY2hvb2xzLWFuZC1jb2xsZWdlcy1pbi04LWRpc3RyaWN0cy1vZi1jaGVubmFpLTM5NDczNzguaHRtbNIBAA?oc=5