மாவட்டத்தில் பரவுது மெட்ராஸ் ஐ – Dinamalar

சென்னைச் செய்திகள்
Advertisement

விருதுநகர்,-மாவட்டத்தில் பரவி வரும் மெட்ராஸ் ஐ எனும் கண் வெண்படல அலர்ஜி நோயால் குழந்தைகள், சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக் காலத்தின் போதும் கண் வெண்படல அலர்ஜி நோய் பாதிப்பு ஏற்படுவது வழக்கம். இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை பெய்து வரும் சூழலில் கண் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு அதிவேகமாக பரவும் தன்மை கொண்டது. பாக்டீரியா, வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்படுகிறது. கண்களில் நீர்வடிதல், எரிச்சல் போன்றவற்றோடு சிவக்க வைத்து அதில் சுரக்கும் திரவங்கள் வழியாக பரவுகிறது.

மாவட்டத்தில் வத்திராயிருப்பு எஸ்.ராமச்சந்திரபுரம், விருதுநகர் நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் மெட்ராஸ் ஐ வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க சுகாதாரத் துறையினர் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை துணை இயக்குனர் யசோதா கூறியதாவது:

மாவட்டத்தில் கண் அலர்ஜி குறித்து கண்காணித்து வருகிறோம். போதிய மருத்துவக் குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிகிச்சை அளிக்க தயாராக உள்ளனர். மருந்துகள் இருப்பில் உள்ளன. எனவே பாதிக்கப்பட்டோர் சுய மருத்துவம் எடுக்காமல் அருகில் உள்ள அரசு மருத்துவ மனை, ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல வேண்டும். பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

மாவட்ட டேக்வாண்டோ போட்டி


மாவட்ட டேக்வாண்டோ போட்டி

முந்தய

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அடுத்து
வாசகர் கருத்துSource: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFtYWxhci5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP2lkPTMxNjY3MjXSAQA?oc=5