சென்னை: பல்வேறு பகுதிகளில் மிதமான மழை – Dinamalar

சென்னைச் செய்திகள்
Advertisement

சென்னை : சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்தது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. சென்னையில் வழக்கமாக பெய்யும் பருவமழையின் அளவை விட கடந்த 2 நாட்களில் பெய்த மழை 12 சதவீதம் அதகரித்துள்ளது.

அதே போல் சீர்காழி பகுதியில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 44 செ.மீ அளவிற்கு மழை பெய்துள்ளது. மேலும் தீவிர மழை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக 28-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி, மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு, அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Dinamalar iPaper


மத்தியில் ஆதரவாம்; மாநிலத்தில் எதிர்ப்பாம்; இட ஒதுக்கீட்டில் காங்., ‘ஏடாகூடம்’(18)

முந்தய


‘அமேசான்’ நிறுவனத்திலும் பணிநீக்கம்(10)

அடுத்து
வாசகர் கருத்துSource: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFtYWxhci5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP2lkPTMxNjg1ODbSAQA?oc=5