மோசமான வானிலை: சென்னையில் 8 விமானங்கள் ரத்து | 8 flights canceled in Chennai – hindutamil.in – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சென்னையில் மோசமான வானிலை நிலவி வருகிறது. அதனால், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, நேற்று அதிகாலை 4.55 மணிக்கு சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்லும் விமானம், காலை 6.15 மணிக்கு மதுரை செல்லும் விமானம், பகல் 1.10 மணிக்கு கர்னூல் செல்லும் விமானம், மாலை 5.10 மணிக்கு மதுரை செல்லும் விமானம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல, மும்பை, மதுரை, கர்னூர் ஆகிய இடங்களில் இருந்து சென்னை வரவேண்டிய 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நேற்று ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து இலங்கை, பாரீஸ், தோஹா, ஷார்ஜா, துபாய் உள்ளிட்ட 7 நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiUmh0dHBzOi8vd3d3LmhpbmR1dGFtaWwuaW4vbmV3cy90YW1pbG5hZHUvODk2NjY2LTgtZmxpZ2h0cy1jYW5jZWxlZC1pbi1jaGVubmFpLmh0bWzSAQA?oc=5