சென்னை என்விரோ மூலம் நகரில் கைவிடப்பட்ட கழிவுகள் குறித்த புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை என்விரோ, 1800 833 5656 என்ற கட்டணமில்லா சேவைகள் மூலம் நகரில் கைவிடப்பட்ட கழிவுகள் குறித்த புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வை வழங்குகிறது. சென்னை, நவம்பர் 16, 2022: ரி சஸ்டைனபிலிட்டி  லிமிடெட் இன் முழுச் சொந்தமான துணை நிறுவனமான சென்னை என்விரோ சொல்யூஷன்ஸ், சென்னைவாசிகளுக்கு, 1800 8335656 என்ற எண்ணின் மூலம் கவனிக்கப்படாத கழிவுகள் குறித்த கவலைகளின் கட்டணமில்லா புகார்களைக்  கையாளுதலுடன் அதிகாரமளிக்கிறது. இந்த முன்முயற்சி, நகரம் முழுவதும் திறமையான கழிவு மேலாண்மையை உறுதி செய்வதற்கான அவர்களின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும்.

எந்தவொரு கழிவுக் குவிப்பு, துர்நாற்றம் அல்லது முறையற்ற கழிவுகளை அகற்றும் நடைமுறைகளைச் சுற்றியுள்ள சிக்கல்களை இந்த நிறுவனம் தீர்க்கும். கட்டணமில்லா சேவையை வழங்குவது, நகரத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கும், 100 சதவீத கழிவுகளை மூலத்திலேயே பிரிக்கும் சென்னை பெரு மாநகராட்சியின் நோக்கத்தை  அடைவதற்கும் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த உதவும். பொதுமக்களுக்கு சிரமங்கள்  மற்றும் இடையூறு விளைவிக்கும் கவனிக்கப்படாத கழிவுகள் குறித்த குறைகளை, குடியிருப்பாளர்கள் தெரிவிக்க இந்த அமைப்பு அனுமதிக்கும். 24/7 செயல்படும் அதிநவீன கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் பயிற்சி பெற்ற நிபுணர்களால் குறைகள் தீர்க்கப்படும்.

சிக்கல்களைக் கண்டறிந்து விரைவான தீர்வுகளை வழங்க இது ஒரு சிறந்த வழியாகும். சென்னை என்விரோ, IoT-இயக்கப்பட்ட திடக்கழிவு சேகரிப்பு அமைப்பை வடிவமைத்து செயல்படுத்த சென்னை பெரு நகர மாநகராட்சியுடன்  ஒரு 8 வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. திருவொற்றியூர் (மண்டலம் 1), மணலி (மண்டலம் 2), மாதவரம் (மண்டலம் 3), மற்றும் அம்பத்தூர் (மண்டலம் 7) உட்பட சென்னையில் 4 மண்டலங்களை உள்ளடக்கிய அதன் கழிவு சேகரிப்பு அமைப்பை இது கொண்டுள்ளது. இந்நிறுவனம் நகரத்தின் நிலைப்புத்தன்மையின் அளவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, நீல நிற அனைத்து மகளிர் குழுவின் தலைமையில் 95% மூலப் பிரிவினையின் குறிப்பிடத்தக்க விகிதத்தை மணலி பெற்றுள்ளதால் முதன்மையாக உள்ளது.

செயல்முறைகளை மேலும் சீரமைத்து, சென்னை என்விரோ, தனது சேவையை இந்த அர்ப்பணிப்பான பொது நல சேவையுடன், ஒரு உச்சநிலையை எடுத்துள்ளது. கைவிடப்பட்ட கழிவுகளால் எழும் பிரச்சினைகளுடன்  இந்த நகர மக்கள் இனி காத்திருக்க வேண்டியதில்லை, சுமக்கவேண்டியதில்லை. சென்னை என்விரோ 1800-833-5656 என்ற தங்களது கட்டணமில்லா எண்ணில் உங்கள் எல்லா புகார்களையும்  தீர்க்க இங்கே  உள்ளது. ரி சஸ்டைனைபிலிட்டி  லிமிடெட் பற்றி : KKR ஆதரிக்கும் நிறுவனமான, ரி  சஸ்டைனைபிலிட்டி லிமிடெட் (ReSL), விரிவான சுற்றுச்சூழல் மேலாண்மை சேவைகளை வழங்கும் ஆசியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும்.

ReSL ஆனது, கழிவு மேலாண்மை, (அபாயகரமான, முனிசிபல் மற்றும் உயிரி மருத்துவம்), MAR POL, கட்டுமானக் கழிவுகள் மற்றும் மின்-கழிவுகள், கழிவிலிருந்து ஆற்றல் வரை ; மறுசுழற்சி (கழிநீர், காகிதம், பிளாஸ்டிக் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட கழிவு); சுற்றுச்சூழல் தீர்வுகள் (நிவர்த்தி, ETPகள் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு); தானியங்கி கார் பார்க் மேலாண்மை; மற்றும் வசதிகள் மேலாண்மை.போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் சுற்றுச்சூழல் சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு தீர்வுகளின் ஒரு முழு வரம்பை  வழங்குகிறது;

இந்தியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், சவுதி அரேபியா, குவைத், ஓமன், தான்சானியா மற்றும் அமெரிக்கா முழுவதும் பரவியுள்ள 85 க்கும் மேற்பட்ட செயல்பாட்டு இடங்கள் உட்பட, ReSL ,ஒரு  வளர்ந்து வரும் உலகளாவிய தடத்தைக் கொண்டுள்ளது  25 ஆண்டுகளுக்கும் மேலான செயல்பாட்டு வரலாற்றுடன் , இந்த நிறுவனம், முழு கழிவு மேலாண்மையிலும்  ஆதிக்கம் செலுத்துகிறது மற்றும் அதன் வாடிக்கையாளர்களுக்கான சுற்றுச்சூழல் தீர்வுகள் இடத்தில் நீண்டகால பங்காளியாக இருந்து வருகிறது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vTmV3c19EZXRhaWwuYXNwP05pZD04MTQ3NDnSAQA?oc=5