பரவுகிறது டெங்கு, டைபாய்டு, மெட்ராஸ் ஐ: மக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை – Dinamalar

சென்னைச் செய்திகள்
Advertisement

சிவகங்கை : மாவட்டத்தில் தொடர் மழைக்கு ஏடிஸ் வகை கொசுக்கள் மூலம் ‘டெங்கு’, ‘டைபாய்டு’ காய்ச்சல் மற்றும் ‘மெட்ராஸ் ஐ’ பரவலை தடுக்க மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் 4 நகராட்சி, 11 பேரூராட்சி, 445 ஊராட்சிகளின் கீழ் உள்ள 12,000 கிராமங்களில் 14 லட்சத்து 14,993 பேர் வசிக்கின்றனர். தொடர் மழைக்கு வீடு, வர்த்தக நிறுவனங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள தேவையற்ற பிளாஸ்டிக் கப், டயர், சிரட்டை உள்ளிட்ட பொருட்களில் தேங்கியுள்ள மழைநீரில் ‘டெங்கு’ காய்ச்சலை பரப்பும் ‘ஏடிஸ் எஜிப்ட்’ வகை கொசுப்புழுக்கள் அதிகளவில் இனப்பெருக்கம் செய்யும்.

இந்த கொசுக்கள் கடிப்பதன் மூலம் ‘டெங்கு’ காய்ச்சல் பரவி வருகிறது. அதேபோன்று மழை காலத்தில் ஆறு, குளங்கள், ஊரணிகளில் தேங்கியுள்ள நீரினை பயன்படுத்துவதின் மூலம் அதில் உள்ள கழிவுகளில் தொற்று பரவுவதன் மூலமும் ‘டைபாய்டு’ ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். தற்போது மழை, வெயில் என சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பள்ளி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவில் ‘மெட்ராஸ் ஐ’ என்ற கண்வலி நோய் பரவி வருகின்றன. இதுபோன்று மக்களை பாதிப்பிற்கு உள்ளாக்கும் ‘டெங்கு’, மற்றும் ‘டைபாய்டு’ காய்ச்சல் பரவுவதை தவிர்க்க மக்கள் சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

* வளாகத்தில் கொசு இல்லை சான்று:

சிவகங்கை சுகாதார துணை இயக்குனர் விஜய்சந்திரன் கூறியதாவது, தினமும் அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருவோரில் 30 முதல் 40 பேர் காய்ச்சலால் பாதிக்கின்றனர். ‘டெங்கு’ காய்ச்சல் அறிகுறி இல்லை. இருப்பினும் பள்ளி, அரசு அலுவலக கட்டடங்களில் மழை நீர் தேங்காத வகையில் கண்காணிக்க வேண்டும் என கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூறியுள்ளார். அந்தந்த அலுவலக வளாக அதிகாரிகள்

‘எங்கள் வளாகத்தில் கொசு இல்லை’ என்ற உறுதிமொழி சான்று வழங்க வேண்டும். டயர் கடைகள், ஒர்க் ஷாப்களில் தேவையற்று கிடக்கும் டயர்களை அப்புறப்படுத்த கூறியுள்ளோம். டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 564 பேர் ஈடுபடுகின்றனர். இது தவிர கொசுக்களை ஒழிக்க 100 புகை போக்கி இயந்திரம், 6 வாகன புகை போக்கி இயந்திரம் மூலம் கொசுக்களை ஒழிக்க மருந்துடன் கலந்த புகை அடிக்கப்படுகிறது. 12 நடமாடும் மருத்துவ வாகனங்கள் காய்ச்சல் அறிகுறி உள்ள கிராமங்களில் சென்று சிகிச்சை அளிக்கின்றனர். இது தவிர 24 ஆர்.பி.எஸ்.கே., வாகனம் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு சிகிச்சை தரப்படுகிறது, என்றார்.///

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Dinamalar iPaper


பள்ளிகள் பராமரிப்பில் தொடரும் சிக்கல்; அரசு கொள்கை முடிவில் மாற்றம் வருமா?

முந்தய


மது அருந்தி ‘சிக்கன் ரைஸ்’ சாப்பிட்ட வாலிபர் பலி

அடுத்து








வாசகர் கருத்து



Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFtYWxhci5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP2lkPTMxNzAyNzjSAQA?oc=5