கூடைப்பந்தில் கேரள அணி அபாரம் பைனலில் மெட்ராஸ் ஒய்.எம்.சி.ஏ., ஏமாற்றம் – Dinamalar

சென்னைச் செய்திகள்
Advertisement

சென்னை ஒய்.எம்.சி.ஏ, அணிகளுக்கு இடையிலான, அகில இந்திய கூடைப்பந்து போட்டியில், மெட்ராஸ் அணியை வீழத்தி கேரளா அணி கோப்பையை கைப்பற்றியது.

நாட்டில் பல்வேறு பகுதிகளில் செயல்படும் ஒய்.எம்.சி.ஏ., அணிகளுக்கு இடையிலான, அகில இந்திய கூடைப்பந்து போட்டி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ, கல்லுாரி வளாகத்தில், கடந்த 12 மற்றும் 13ம் தேதிகளில் நடந்தது.

இதில், சென்னை, கோயம்புத்துார், கோட்டயம், மும்பை, கோல்கட்டா, கோவா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்படும் 12 ஓய்.எம்.சி.ஏ, அணிகள் பங்கேற்றன.

போட்டிகள், ‘நாக் – அவுட்’ முறையில் நடத்தப்பட்டன. அனைத்து போட்டிகள் முடிவில், காலிறுதிக்கு முந்தைய சுற்று ஒன்றில் கோவை அணி, 56 – 10 என்ற புள்ளிக்கணக்கில், சென்னை ஒய்.எம்.சி.ஏ., கல்லுாரி அணியை வீழ்த்தியது.

காலிறுதிப் போட்டியில், மும்பை அணி, 72 – 61 என்ற புள்ளிக்கணக்கில் கோவையையும், கோட்டயம் அணி, 58 – 57 என்ற புள்ளிக்கணக்கில் கோவா பஞ்சியம் அணியையும் வீழ்த்தியது. அரையிறுதியில், கோட்டயம் அணி, 60 – 45 என்ற புள்ளிக்கணக்கில் மும்பை அணியையும், மெட்ராஸ் ஒய்.எம்.சி.ஏ., அணி, 68 – 51 என்ற கணக்கில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., கல்லுாரியையும் தோற்கடித்தன.

தொடர்ந்து நடந்த விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், கோட்டயம் மற்றும் மெட்ராஸ் ஒய்.எம்.சி.ஏ., அணிகள் மோதின.

அதில், 44 – 22 என்ற கணக்கில் கோட்டயம் அணி வெற்றி பெற்று, முதலிடத்தை தட்டிச் சென்றது. வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Dinamalar iPaper


வெள்ளம் தேங்கி விவசாயம் பாதிப்பு

முந்தய


600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு

அடுத்து
வாசகர் கருத்துSource: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFtYWxhci5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP2lkPTMxNzEyMzbSAQA?oc=5