சென்னையில் நவ. 20-ம் தேதி வரை 16 கழிவு நீர் உந்து நிலையங்கள் செயல்படாது: சென்னை குடிநீர் வாரியம் தகவல் – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில், அண்ணா பிரதான சாலை, எம்.ஜி.ஆர் நகர் சந்தை சந்திப்பில் உள்ள இயந்திர நுழைவாயிலில் பழுது நீக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 18.11.2022 அன்று மாலை 4 மணி முதல் 20.11.2022 அன்று காலை 4 மணி வரை பகுதி 9, 10 மற்றும் பகுதி 13 உட்பட்ட 16 கழிவு நீர் உந்து நிலையங்கள் செயல்படாது.

சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில், அண்ணா பிரதான சாலை, எம்.ஜி.ஆர் நகர் சந்தை சந்திப்பில் உள்ள இயந்திர நுழைவாயிலில் பழுது நீக்கும் பணிகள் 18.11.2022 அன்று மாலை 4 மணி முதல் 20.11.2022 அன்று காலை 4 மணி வரை மேற்கொள்ளப்படுவதால் சிஐடி நகர், சைதாப்பேட்டை, ஜாபர்கான் பேட்டை, அசோக் நகர், கே.கே. நகர், எம்.ஜி.ஆர் நகர், ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள 16 கழிவு நீர் உந்து நிலையங்கள் செயல்படாது.

எனவே, பகுதி-9, 10 மற்றும் பகுதி-13-க்குட்பட்ட இடங்களில் உள்ள இயந்திர நுழைவாயில்களில் கழிவுநீர் நிரம்பி வெளியேறும் நிலை எற்பட்டால் அவசரத் தேவைகளுக்காக கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் கழிவுநீரை வெளியேற்ற கீழ்க்காணும் எண்களுக்கு  (தேனாம்பேட்டை) கைபேசி எண்.8144930909, (கோடம்பாக்கம்) கைபேசி எண்.8144930910, (அடையாறு) கைபேசி எண்.8144930913 பகுதி அலுவலர்களை தொடர்பு கொள்ளவும்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MTUzMzbSAQA?oc=5