சென்னை அருகே இத்தனை அழகான தீவுகள் இருக்கா… இது தெரியாம போச்சே…! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

சிங்கார சென்னையில் வாழும் மக்கள் வார இறுதியில் எங்கே போகலாம் என்று யோசிக்கும் போது கோட்டை, அருங்காட்சியகம், பார்க், கடற்கரை, மால், தியேட்டர், விளையாட்டு பூங்காக்கள் என்று லிஸ்ட் வரும். எல்லாம் ஏற்கனவே போய் விட்டோமே இனி புதிதாக எங்கேதான் செல்வது என்று கூட ஒரு சிலருக்கு தோன்றும். இப்படியானவர்களுக்கு இந்த செய்தி பயனுள்ளதாக இருக்கும்….

சென்னையை சுற்றி நிறைய கடற்கரைகள் இருப்பது நமக்குத் தெரியும். ஆனால் அந்த கடற்கரை பகுதிகளில் அமைந்துள்ள தீவுகள் பற்றி நமக்கு பெரும்பாலும் தெரியாது. தீவுத்திடல் மட்டுமே தெரியும். ஆனால்

அவற்றில் முதல் தீவு இந்த இருக்கம் தீவு. இது ஆங்கிலத்தில் Hidden island, Irukkam island, Lake island என்றெல்லாம் அழைக்கின்றனர். இந்த அழகிய தீவு சென்னையில் இருந்து 50 கிமீ தொலைவில் புலிகாட் ஏரியின் நடுவே அமைந்துள்ளது.

நகர்ப்புற வாழ்க்கை முறையிலிருந்து ஒரு சின்ன பிரேக் எடுக்க நினைக்கும் பயணிகளிடையே இது ஒரு முக்கிய சுற்றுலா தலமாக அமையும்.

இதையும் பாருங்க : தென்னிந்தியாவின் சிரபுஞ்சி அகும்பே பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? டிரீப் செல்ல சரியான நேரம் இதுதான்…!

க்விபிள் தீவு சென்னையில் உள்ள அடையாறு ஆற்றில் அமைந்துள்ள க்விபிள் தீவு (Quibble island), சால்ட் வாட்டர் லகூன்களில் உருவான நான்கு சிறிய தீவுகளில் மிகப்பெரியது ஆகும். தீவின் நடுவே ஐரோப்பியர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஒரு கல்லறை அமைந்துள்ளது.

பிரெஞ்சு தலைமையிலான இந்தியப் படைகளுக்கும் நவாப் படைகளுக்கும் இடையே நடந்த போருக்குப் பிறகு இந்த கல்லறை இங்கு கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. அடையார் ஆற்றின் நடுவே அமைந்துள்ள இந்த தீவுக்கு சாந்தோம் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்

திமிங்கல தீவு சென்னை அடையாறு ஆற்றங்கரையில் உடைந்த பாலத்திற்கு அருகே அமைந்துள்ளது. இங்கு ஒரு போட்டிங் கிளப்பும் செயல்படுகிறது. ஆற்றில் நீர் மட்டம் நன்றாக இருக்கும் போதெல்லாம், அந்த போட் கிளப்பின் சார்பில் இங்கு போட்டிங் ஏற்பாடு செய்யப்படுகிறது.

அடையாறு பாலத்திற்கு அப்பால் உள்ள ஆறு தெளிவாக தெரிவதுடன், சீசன் காலத்தில் பல புலம்பெயர் பறவைகளளையும் நாம் இங்கே காணலாம்.

இதையும் பாருங்க: பனிமுகடுகளுக்கு இடையே மலையேற ஆசையா.. உத்தரகாண்டில் உங்களுக்கான 5 ஸ்பாட்ஸ்!

ஆலம்பாறை தீவு

18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பட்ட ஆலம்பாறை கோட்டை துறைமுகமாக செயல்பட்டது. சென்னையில் இருந்து 70 கிமீ தூரத்தில் அமைந்துள்ள இந்த பழங்கால கோட்டை கடற்கரையும் வங்காள விரிகுடாவும் ஒன்று சேரும் இடத்தில் அமைந்து சிறு சிறு தீவுகளை உருவாக்கியுள்ளது.

ஒரு நாள் பிக்னிக் ஆக சென்னையில் இருந்து இ.சி.ஆர் சாலையில் புறப்பட்டால் ஒன்றரை மணி நேரத்தில் ஆலம்பாறை கோட்டை இருக்கும் இடைக்கழிநாடை அடைந்து விடலாம். இந்த வரலாற்று நினைவுச்சின்னத்தை சுற்றி பார்த்ததோடு சிறு சிறு தீவுகளிலும் நாம் விளையாடி மகிழலாம்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMihgFodHRwczovL3RhbWlsLm5ld3MxOC5jb20vbmV3cy9saWZlc3R5bGUvdHJhdmVsLWJlc3QtNC1iZWF1dGlmdWwtc2lnaHQtc3RlYWxpbmctaXNsYW5kcy1uZWFyLWNoZW5uYWktZm9yLWJlc3Qtb25lLWRheS10cmlwcy04NDAwNjIuaHRtbNIBAA?oc=5