சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – தினமணி

சென்னைச் செய்திகள்

கோப்புப்படம்

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை முதல் வட  தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகதாகவும், நாளை மறுநாள் திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலுரில் கனமழைக்கு பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: மகா மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த மண்டலம் காரணமாக இன்று மாலை முதல் வட தமிழகத்தில் மழை பெய்ய தொடங்கும். இதனால், நாளை, நாளை மறுநாள் வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும்  என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiemh0dHBzOi8vd3d3LmRpbmFtYW5pLmNvbS90YW1pbG5hZHUvMjAyMi9ub3YvMjAvY2hhbmNlLW9mLWhlYXZ5LXJhaW4tdG9tb3Jyb3ctaW4tNi1kaXN0cmljdHMtaW5jbHVkaW5nLWNoZW5uYWktMzk1MjgyMy5odG1s0gF3aHR0cHM6Ly9tLmRpbmFtYW5pLmNvbS90YW1pbG5hZHUvMjAyMi9ub3YvMjAvY2hhbmNlLW9mLWhlYXZ5LXJhaW4tdG9tb3Jyb3ctaW4tNi1kaXN0cmljdHMtaW5jbHVkaW5nLWNoZW5uYWktMzk1MjgyMy5hbXA?oc=5