சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இரவு 7 வரை மழைக்கு வாய்ப்பு! – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி சென்னைக்கு 420 கி.மீ அருகே காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் வலுப்பெற்று நிலை கொண்டுள்ளது.  இது வடதமிழகம் நோக்கி நகர்ந்து நாளை காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கவுள்ளது.

இதன்காரணமாக, இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க |  புதுப்பொலிவுடன் திரைக்கு வருகிறது ரஜினியின் ‘பாபா’!

இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று இரவு 7 மணிவரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMidWh0dHBzOi8vd3d3LmRpbmFtYW5pLmNvbS90YW1pbG5hZHUvMjAyMi9ub3YvMjEvY2hhbmNlLW9mLXJhaW4tdGlsbC03LXBtLWluLTUtZGlzdHJpY3RzLWluY2x1ZGluZy1jaGVubmFpLTM5NTMzNTguaHRtbNIBAA?oc=5