சமையல் குறித்து கணவர் சொன்ன அந்த ஒரு விஷயம், “மெட்ராஸ் சமையல்” ஸ்டேபியின் சக்ஸஸ் ஸ்டோரி. – Tamil Behind Talkies

சென்னைச் செய்திகள்

-விளம்பரம்-

யூடுயூப் சேனல்களின் வரிசையில் சமையல் சேனல்கள் மிகவும் வேகமாகவே வளர்ந்து விடுகின்றனர். அதற்கு காரணம் பலருக்கும் அவர்களின் சமையல் மற்றும் பேசும் முறை பிடித்திருப்பதே. அப்படி பேசுவது மட்டுமில்லாமல் சமைக்கவும் கற்றுக்கொடுக்கும் சேனல்களில் ஓன்று தான் “மெட்ராஸ் சமையல்” என்ற யூடுயூப் சேனல். கிட்டத்தட்ட 5.4மில்லியன் சப்கிரைப்பற்களை கொண்ட இந்த சேனல் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.

-விளம்பரம்-

இந்நிலையில்தான் இந்த சேனலின் உரிமையாளரான ஸ்டேபி பிரபல பத்திரிக்கைக்கு தொலைபேசியின் வாயிலாக பேட்டியளித்திருந்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது `என்னுடைய சொந்த ஊர் நாகர்கோவில் அங்கு நான் ஒரு ஹாஸ்டலில் படித்தேன், ஞாயற்று கிழமைகளில் மட்டும் வீடு சென்று அம்மாவுடன் சமைத்து பழகுவேன். படித்து முடித்தபின் மூன்று வருடங்கள் நான் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தேன்.

பிறகு திருமணமாகவே கணவருடன் அமெரிக்கா சென்று அங்கு என்னுடைய தனிமையை போக்குவதற்காக சமைக்க ஆரம்பித்தேன். என் கணவருக்கு பிடித்த விதவிதமாக உணவுகளை செய்து கொடுத்தேன். அதோடு என் கணவர் சாப்பாடு விஷியத்தில் ஒரு குறை இருந்தாலும் கண்டுபிடித்து விடுவார், அவர் அப்படி கண்டுபிடிக்க கூடாது என்பதற்காக முடிந்த அளவிற்கு சரியாக சமைத்து வந்தேன். இந்நிலையில்தான் என் கணவர் “நீ ரொம்ப நல்ல சமைக்குற உன்னுடைய சமையலை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடு என கூறினார்.

-விளம்பரம்-

நானும் வீட்டில் சும்மாதானே இருக்கிறோம் என்று நானும் என் கணவரும் “மெட்ராஸ் சமையல்” என்ற ஒரு யூடுயூப் சேனலை தொடங்கினோம். தொடக்கத்தில் எங்களுடைய சேனலுக்கு பெரிய வரவேற்பில்லை ஆனால் காலம் போக போக நாங்களே எதிர்பார்க்காத அளவிற்கு வியூஸ் எகிறியது. இதனை பார்த்த எனக்கு மனசு ரெக்கை கட்டி பறந்தது. மேலும் சமையலை மட்டுமல்ல சமயலறையையும் அழகாக வைத்திருக்க முயற்சி செய்தேன். ஒரு சமையலை சேனலில் பதிவேற்றும் முன்னர் அந்த ரெசிபியை 2 முறை செய்து பார்ப்பேன்.

-விளம்பரம்-

அது எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே வீடியோ செய்ய ஆரம்பிப்பேன். வீடியோ எடுக்க இரண்டு நாள், அதனை எடிட்டிங் செய்ய இரண்டு நாள் என வாரத்தில் 2 வீடியோக்களை பதிவேடுவேன். நான் சமைப்பதை வீடியோ செய்வது மட்டுமில்லாமல் என்னுடைய பார்வையாளர்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு பதிலைப்பேன். எனக்கு தெரியாத பல சமையல் குறிப்புகளை என்னுடைய மாமியார் மற்றும் அம்மாவிடம் கேட்டறிந்து சமையல் செய்ய கற்றுக்கொண்டேன்.

வீடியோ தயார் செய்வதற்கு முன்னர் அந்த ரெசிபியை இரண்டு மூன்று முறை செய்து பார்பதினால் அதிக சமையல் பொருட்கள் தேவைப்படும். அந்த செலவு யூடுயூப் சேனலில் இருந்து வரும் சம்பளத்திலேயே கழிந்து விடும் இருந்தாலும் மற்றவர்களுக்கு எனக்கு தெரிந்ததை கற்றுக் கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறிய அவர் மேலும் இதை நான் செய்வதற்கு காரணமாக இருக்கும் என்னுடைய குடும்பத்தினருக்கு நன்று என்று “மெட்ராஸ் சமையல்” உரிமையாளரான ஸ்டேபி அந்த பதிவில் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNmh0dHBzOi8vdGFtaWwuYmVoaW5kdGFsa2llcy5jb20vbWFkcmFzLXNhbWF5YWwtc3RhZmZ5L9IBAA?oc=5