ஊட்டியாகிறதா சென்னை..? மழை, மேகமூட்டம், குளிர்… வானிலை முன்னறிவிப்பு! – Vikatan

சென்னைச் செய்திகள்

இதனால் நவம்பர் 23, 24 ஆகிய தேதிகளில், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

25, 26 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை கோப்புப் படம்

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன்கூடிய மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலையானது 25 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலையானது  22 – 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும்.

அதோடு மேகமூட்டம் 48 மணிநேரம் வரை காணப்படுவதோடு, ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது’’ என்று அறிவித்துள்ளது. 

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiS2h0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL25ld3MvYW5ub3VuY2VtZW50cy9sYXRlc3QtdXBkYXRlLW9mLWNoZW5uYWktd2VhdGhlctIBAA?oc=5