கள்ளக்குறிச்சி பகுதியில் மெட்ராஸ் ஐ பரவல் – Dinamalar

சென்னைச் செய்திகள்
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கண்களை உறுத்தும் ‘மெட்ராஸ் ஐ’ பரவி வருகிறது.

வடகிழக்கு பருவமழை தொடங் கியுள்ள நிலையில், கள்ளக்கு றிச்சி மாவட்டத்தில் பகல் நேரத் தில் வெயில் மற்றும் மழையும், இரவு நேரத்தில் அதிகமான பனிப்பொழிவும் நிலவி வருகிறது. மாறியுள்ள தட்ப வெப்ப சூழ்நிலையால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்ட நிலையில், கடந்த சில தினங்களாக கண்களை உறுத்தும் ‘மெட்ராஸ் ஐ’ நோயும் பரவத் தொடங்கியுள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கண்கள் சிவந்திருப்பதுடன், கண் பகுதியில் எரிச்சல், நீர் வழிதல், வீக்கம், வலி, உறுத்தல் ஆகியவை இருக்கும். இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டவரின் அருகில் இருப்பது, பொருட்களை உபயோகிப்பது உள்ளிட்ட காரணங்களில் மற்றவர்களுக்கு எளிதில் பரவும். குறிப்பாக, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ‘மெட்ராஸ் ஐ’ பாதிப்பு அதிகமாக இருக்கும். இந்த நோயினை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை பெறுவதன் மூலம் எளிதாக குணப்படுத்தலாம். ஆனால், ‘மெட்ராஸ் ஐ’ தாக்குதலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், மருந்தகம் சென்று மருந்து வாங்கி பயன்படுத்துகின்றனர்.

இதை தவிர்த்து, கண் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே உபயோகிக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட சுகாதார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

மஞ்சள் நிற தண்ணீர்; பாட்டிலுடன் பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை


மஞ்சள் நிற தண்ணீர்; பாட்டிலுடன் பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை

முந்தய

சிவாலயங்களில்  பிரதோஷ வழிபாடு


சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

அடுத்து
வாசகர் கருத்துSource: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFtYWxhci5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP2lkPTMxNzYxODfSAQA?oc=5