மெட்ராஸ் ஐ பாதிப்பால் அச்சம் வேண்டாம்: மருத்துவ கல்லூரி கண் மருத்துவர் அறிவுரை – Dinamalar

சென்னைச் செய்திகள்
Advertisement

கள்ளக்குறிச்சி : ‘மெட்ராஸ் ஐ’ நோயால் பாதிக்கப்படுபவர்கள் அச்சமடைய வேண்டாம் என, அரசு மருத்துவ கல்லுாரி கண் பிரிவு துறை தலைவர் நேரு தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கண்களை உறுத்தும் ‘மெட்ராஸ் ஐ’ என்னும் நோய் பரவி வருகிறது. இது தொடர்பாக ‘தினமலர்’ நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.

இது குறித்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை கண் பிரிவு துறை தலைவர் நேரு கூறியதாவது;கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது மெட்ராஸ் ஐ நோய் பரவி வருகிறது. பெரும்பாலும் அக்., – நவ., மாதங்களில் இந்நோய் பரவுகிறது. கடந்த 11ம் தேதி முதல் நேற்று (22ம் தேதி) வரை கள்ளக்குறிச்சி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 39 குழந்தைகள் உட்பட மொத்தம் 104 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கண்கள் சிவந்திருக்கும், கண் எரிச்சல் மற்றும் வலி, நீர் வழிதல், கண் இமை வீக்கம், கண் கூச்சம், உறுத்தல் ஆகியவை ஏற்படும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு வந்து விட்டால் எளிதாக மற்றவர்களுக்கும் பரவிவிடும்.

பள்ளி, கல்லுாரி போன்ற கூட்டமான இடங்களில் மெட்ராஸ் ஐ தொற்று பரவ அதிக வாய்ப்பு உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அச்சமடைய வேண்டாம். மூன்று நாட்களில் தாமாகவே குணமாகிவிடும்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், மெட்ராஸ் ஐ நோய் பாதிப்புடையவர்களுக்கு சிகிச்சைக்கான சொட்டு மருந்துகள் (ஆண்டிபயாடிக்) வழங்கப்பட்டு வருகிறது. தேவையான அளவில் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மருத்துவரின் ஆலோசனைபடி முறையான சிகிச்சை எடுத்தால் மெட்ராஸ் ஐ பாதிப்பு விரைவாக குணமாகிவிடும்.

இந்நோய் மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்கும் பொருட்டு பாதிப்புக்குள்ளானவர்கள் கருப்பு கண்ணாடி பயன்படுத்த வேண்டும். கண்களுக்கு சொட்டு மருந்து போடுவதற்கு முன்பும், பின்பும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். மெட்ராஸ் ஐ நோய் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர், கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Dinamalar iPaper


மாணவிகளை தாக்கிய மூன்று பேர் கைது

முந்தய


தணிந்தது கொசஸ்தலையில் சீற்றம்

அடுத்து
வாசகர் கருத்துSource: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFtYWxhci5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP2lkPTMxNzY4NTDSAQA?oc=5