சென்னை: ரூ.5 லட்சம் பணம் கேட்டு டீக்கடைக்காரர் கடத்தல் – திரிபுரா இளைஞர்கள் கைது – Puthiya Thalaimurai

சென்னைச் செய்திகள்

ரூ.5 லட்சம் பணம் கேட்டு டீக்கடை உரிமையாளரை கடத்திய வழக்கில் தொடர்படைய மூவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை தாம்பரம் பகுதியையடுத்த இரும்புலியூரில் டீக்கடை மற்றும் ஜுஸ் கடை நடத்தி வருபவர் அன்வர் உசேன் (28). இவர் கடந்த 22 ஆம் தேதி கடையில் இருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள், தாங்கள் திரிபுராவில் இருந்து வந்துள்ள போலீஸ் எனக் கூறி அன்வர் உசேனை விசாரணை செய்ய வேண்டுமென காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதைக்கண்ட அன்வரின் சகோதரர் இக்பால் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தனது அண்ணனை 5 பேர் கொண்ட கும்பல் கடத்தி விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து உடனடியாக போலீசார், தாம்பரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் சோதனை மேற்கொண்டு விசாரணையை துவக்கினர்.

இந்நிலையில், அன்வரை கடத்திச் சென்ற மர்ம கும்பல் அவரது கண்ணை கட்டி அழைத்துச் சென்று ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதையடுத்து வங்கிக் கணக்கில் இருந்து 80 ஆயிரம் ரூபாயை கியூஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து செல்போனை பறித்துக் கொண்டு, கேளம்பாக்கம் அருகே இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.

image

இதையடுத்து அன்வர் கொடுத்த தகவலின் பேரிலும், சிசிடிவி காட்சியின் அடிப்படையிலும், திரிபுராவைச் சேர்ந்த ஜலில் மியா (23), பர்வேஜ் மியா (26), அல்காஸ் மியா (32) ஆகிய மூவரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMigQFodHRwczovL3d3dy5wdXRoaXlhdGhhbGFpbXVyYWkuY29tL25ld3N2aWV3LzE1MTQxMS9DaGVubmFpLUtpZG5hcHBpbmctb2YtYS10ZWEtc2hvcC1vd25lci1mb3ItUnMtNS1sYWtoLTMtVHJpcHVyYS15b3V0aHMtYXJyZXN0ZWTSAYQBaHR0cHM6Ly93d3cucHV0aGl5YXRoYWxhaW11cmFpLmNvbS9hbXAvYXJ0aWNsZS8xNTE0MTEvQ2hlbm5haS1LaWRuYXBwaW5nLW9mLWEtdGVhLXNob3Atb3duZXItZm9yLVJzLTUtbGFraC0zLVRyaXB1cmEteW91dGhzLWFycmVzdGVk?oc=5