சென்னை தனியார் கல்லூரியின் 6வது மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை அடுத்த வண்டலூர் – கேளம்பாக்கம் பிரதான சாலையில் தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் மகாராஷ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த புட்டாளா ஓம் கிரிஸ் என்பவர் பிடெக் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த மாணவன் கல்லூரியின் 6-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

இதனைப்பார்த்த கல்லூரி மாணவர்கள் உடனடியாக கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மாணவனை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதையும் படிங்க:  திருச்சியை மிரள வைத்த 5 கொலைகள்… கண்களை மூடிய கள்ளக்காதல்.. சாமியார் கண்ணன்-கள்ளக்காதலி யமுனாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)

சென்னை

சென்னை

இநத் சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாழம்பூர் ஆய்வாளர் வேலு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டனர்.  இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

வழக்கம்போல் கல்லூரிக்கு வந்த மாணவன் திடீரென 6வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதற்கு  காரணம் கல்லூரி நிர்வாகமா இல்லை வேறு ஏதேனும் காரணமா என பல கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்- வினோத்கண்ணன்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiYWh0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9uZXdzL2NoZW5uYWkvY2hlbm5haS1wcml2YXRlLWNvbGxlZ2Utc3R1ZGVudC1zdWljaWRlLWF0dGVtcHQtODQ1MTg4Lmh0bWzSAWVodHRwczovL3RhbWlsLm5ld3MxOC5jb20vYW1wL25ld3MvY2hlbm5haS9jaGVubmFpLXByaXZhdGUtY29sbGVnZS1zdHVkZW50LXN1aWNpZGUtYXR0ZW1wdC04NDUxODguaHRtbA?oc=5