சென்னை மாமன்றக் கூட்டம் தொடங்கியது! – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை மேயர் பிரியா

சென்னை மேயர் பிரியா தலைமையில் மாமன்றக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

நவம்பர் 28 ஆம் தேதி(இன்று) சென்னை மாமன்றக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை மேயர் பிரியா தலைமையில் மாமன்ற கூட்டம் இன்று கூடி நடைபெற்று வருகிறது. 

இன்றைய மாமன்றக் கூட்டத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டம் நாளைக்கு ஒத்திவைக்கப்படுகிறது. 

மேலும் தொடர்ந்து நடைபெறும் கூட்டத்தில் மழைக்கால நடவடிக்கைகள், மழைநீர் வடிகால் பணிகள், தாழ்வான பகுதிகளில் பாதுகாப்புப் பணிகள், அந்தந்த பகுதிகளில் செயல்படுத்த வேண்டிய இதர திட்டங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாகத் தெரிகிறது. 

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiV2h0dHBzOi8vd3d3LmRpbmFtYW5pLmNvbS90YW1pbG5hZHUvMjAyMi9ub3YvMjgvY2hlbm5haS1jb3Jwb3JhdGlvbi1tZWV0aW5nLTM5NTczOTguaHRtbNIBVGh0dHBzOi8vbS5kaW5hbWFuaS5jb20vdGFtaWxuYWR1LzIwMjIvbm92LzI4L2NoZW5uYWktY29ycG9yYXRpb24tbWVldGluZy0zOTU3Mzk4LmFtcA?oc=5