தென்காசி மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் மெட்ராஸ்-ஐ – Maalaimalar தமிழ்

சென்னைச் செய்திகள்

தென்காசி:

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை தொடர்ந்து தென்காசி மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே மெட்ராஸ்-ஐ எனப்படும் கண்நோய் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இதற்குள்ளான மாணவர்களை விடுப்பு எடுத்துக்கொள்ள பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் அறிவுறுத்தி வருகிறது.

தட்ப வெப்பநிலை

இந்த பாதிப்பானது திடீர் மழை மற்றும் வெயில் என தட்ப வெப்பநிலை மாறி மாறி ஏற்பட்டு வருவதன் காரணமாகவே அதிகரித்து வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த முறை தென்காசியில் வழக்கத்தைவிட அதிகமானோர் இந்த கண்நோய்க்கு பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்களில் எரிச்சலுடன் அரிப்பும், கண்கள் சிவப்பு நிறமாக மாறுவதும், கண்ணில் வீக்கம், உறுத்தல், க‌ண்க‌ளி‌ல் ‌நீ‌ர் வடித‌ல் உள்ளிட்டவை இதன் அறிகுறிகளாக கருதப்படுகிறது. இந்த பாதிப்பு பாதிக்கப்பட்டவரின் உடமைகளை நேரடியாக தொடுவதன் மூலம் பரவலாம்.

தடுக்கும் வழிமுறைகள்

இந்த பரவலை தடுக்க க‌ண் வ‌லிக்கு‌ம் போது, தா‌ன் பய‌ன்படு‌த்து‌ம் பொரு‌ட்களை ம‌ற்றவ‌ரோடு ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ள‌க் கூடாது. த‌னியாக சோ‌ப்பு, துண்டு போ‌ன்றவ‌ற்றை‌ப் பய‌ன்படு‌த்த வே‌ண்டு‌ம். கண்வலி உள்ளவர்களைப் பார்ப்பதாலேயே இது ஒட்டிக் கொள்ளாது.

ஒ‌வ்வொரு முறை உ‌ங்க‌ள் க‌ண்களை சு‌த்த‌ம் செ‌ய்த ‌பிறகு‌ம், கையை சோ‌ப்பு போ‌ட்டு‌ கழுவ வே‌ண்டு‌ம். வெளியில் சென்று வந்தவுடன் கை, முகம் ஆகியவற்றை சோப்பு போட்டு கழுவுங்கள் என மாணவ-மாணவிகளுக்கு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiY2h0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9uZXdzL2Rpc3RyaWN0L2EtcmFwaWRseS1zcHJlYWRpbmctbWFkcmFzLWV5ZS1pbi10ZW5rYXNpLWRpc3RyaWN0LTU0Mjc1ONIBAA?oc=5