சென்னை இசிஆர் கொட்டிவாக்கத்தில் ப்ளஸ் 2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை: உடற்கல்வி ஆசிரியர் கைது – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை இசிஆர் கொட்டிவாக்கத்தில் நெல்லை நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை தொடர்பாக பள்ளி உடற்கல்வி ஆசிரியர் வெங்கடேசனை கைது செய்துள்ளனர். புகையிலை பயன்படுத்தியதாக கூறி வெங்கடேசன் மாணவனை கண்டித்ததால் மாணவன் தற்கொலை செய்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். மாணவர் தற்கொலைக்கு வெங்கடேசன் தான் காரனம் என்று மாணவனின் உறவினர்கள் பள்ளிக்கு சென்று அவரை தாக்கியுள்ளனர். புகாரின் பேரில் நீலாங்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு ஆசிரியர் வெங்கடேசனை கைது செய்துள்ளனர். 

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MTkyNDLSAQA?oc=5