வேலை பார்த்துக் கொண்டே படிக்கலாம்; ஐ.ஐ.டி மெட்ராஸில் ஆன்லைன் படிப்பு அறிமுகம் – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

Pallavi Smart

இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Madras) மெட்ராஸ், பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்கான ஆன்லைன் முதுகலை (M.Tech) படிப்பைத் தொடங்கியுள்ளது, இது நிர்வாகத் துறையில் உள்ளவர்கள் தங்கள் வேலையுடன் கல்வித் தகுதியைத் தொடர அனுமதிக்கும் பிரபலமான நிர்வாக எம்.பி.ஏ (MBA) படிப்புகளைப் போலவே உள்ளது.

டெக்னாலஜி நிறுவனங்களில் இருந்து தகுதியான பொறியாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த ஆன்லைன் திட்டம் ஏற்கனவே பிரபலமடைந்துள்ளது, ஏற்கனவே 600 க்கும் மேற்பட்ட பணிபுரியும் வல்லுநர்கள் வழக்கமான இரண்டு வருட படிப்புக்கு பதிலாக, மூன்று ஆண்டு படிப்புக்கு பதிவுசெய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: 1 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ரத்து – மத்திய அரசு

வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்படுகின்றன மற்றும் அவர்களின் சொந்த நிறுவனங்களில் ப்ராஜெக்ட்ஸ் செய்யப்படலாம். ஐ.ஐ.டி மெட்ராஸ் அதன் தொடர் கல்வி மையம் மூலம் தொலைதூர முறையில் எம்.டெக் படிப்பை வழங்கும் முதல் ஐ.ஐ.டி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

ஐ.ஐ.டி மெட்ராஸ் மையத்தின் தலைவர் பேராசிரியர் தேவேந்திர ஜலிஹால் கூறுகையில், “இந்த திட்டத்தின் மாணவர்களுக்கு வழக்கமான மாணவர்களைப் போலவே உரிமைகளும் சலுகைகளும் உள்ளன. பணிபுரியும் வல்லுநர்கள் தங்கள் பணியிடங்களில் திட்டப்பணிகளை மேற்கொள்ளலாம். ஸ்பான்சர் செய்யப்பட்ட மாணவர்களுடன் ஒப்பிடும்போது அவர்களுக்கு எந்த வசிப்பிடமும் தேவையில்லை. 2020 இல் 14 மாணவர்கள் மட்டுமே இருந்த நிலையில், இந்த ஆண்டு எண்ணிக்கை 605 ஆக உயர்ந்துள்ளது,” என்று கூறினார்.

ஐ.ஐ.டி.,யின் ஆசிரியர்கள், பிற முதன்மை கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் மற்றும் பிரபல தொழில் வல்லுநர்கள் இந்த மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்துவார்கள். மாலையில் நடைபெறும் வகுப்புகளைத் தவிர, மாணவர்கள் தங்கள் ஆசிரிய உறுப்பினர்களுடன் நேரடி உரையாடலையும் நடத்துவார்கள். மாணவர்கள் தங்கள் அலுவலகங்கள் இருக்கும் நகரத்திலேயே தேர்வு எழுதலாம், என ஐ.ஐ.டி மெட்ராஸ் தெரிவித்துள்ளது.

மதிப்பீட்டு முறையைப் பொறுத்தவரை, ஒரு தர அறிக்கை ஐ.ஐ.டி மெட்ராஸ் ஆசிரியர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படும். நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு வழிகாட்டி மாணவர் அவர்களின் பணியிடத்தில் வழிகாட்டுவார். மாணவர்களின் முன்னேற்றம் ஐ.ஐ.டி மெட்ராஸ் ஆசிரியர் மற்றும் வழிகாட்டியால் கூட்டாக மதிப்பீடு செய்யப்படும். ஐ.ஐ.டி மெட்ராஸ் ஆசிரியர்களின் பணியானது தர அறிக்கையை அங்கீகரிப்பதும் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதும் ஆகும்.

இந்த எம்.டெக் திட்டத்தைத் தொடர தங்கள் ஊழியர்களை அனுப்பிய நிறுவனங்களைப் பட்டியலிட்ட பேராசிரியர் தேவேந்திர ஜலிஹால், “சிலிகான் லேப்ஸ், குவால்காம், பெல், எச்.ஏ.எல், பி.என்.ஒய், சிலிக்கான் லேப்ஸ், சினாப்சிஸ், வேலியோ, சைப்ரஸ், ஹனிவெல், அனலாக் டிவைசஸ், எச்.சி.எல், சுந்தரம் கிளைடன், மஹிந்திரா , டெய்ம்லர், போஷ், லாம் ரிசர்ச் மற்றும் ஃபியட் கிரைஸ்லர் ஆகியவை மற்ற நிறுவனங்களில் சில.

பணிபுரியும் நிபுணர்களுக்கான MTech பட்டப்படிப்பில் ஏற்கனவே தகவல் தொடர்பு, VLSI மற்றும் அனலாக் சர்க்யூட்கள், மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ், மல்டிமீடியா சிக்னல் செயலாக்கம், மென்பொருள் பாதுகாப்பு, ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் டிசைன், குவாண்டம் டெக்னாலஜி மற்றும் டேட்டா சயின்ஸில் உள்ள பலதரப்பட்ட திட்டங்கள் ஆகியவை அடங்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMidmh0dHBzOi8vdGFtaWwuaW5kaWFuZXhwcmVzcy5jb20vZWR1Y2F0aW9uLWpvYnMvaWl0LW1hZHJhcy1vZmZlcnMtb25saW5lLW10ZWNoLWNvdXJzZS1mb3Itd29ya2luZy1wcm9mZXNzaW9uYWxzLTU1MTE2Mi_SAXtodHRwczovL3RhbWlsLmluZGlhbmV4cHJlc3MuY29tL2VkdWNhdGlvbi1qb2JzL2lpdC1tYWRyYXMtb2ZmZXJzLW9ubGluZS1tdGVjaC1jb3Vyc2UtZm9yLXdvcmtpbmctcHJvZmVzc2lvbmFscy01NTExNjIvbGl0ZS8?oc=5