சென்னை: ‘பறக்கும் ரயில்வே ஸ்டேஷன்கள் மறுசீரமைப்பு’ – நவீன என்ஜின், ஏசி கோச் போன்ற வசதிகள் வருகிறது! – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்காக அமைக்கப்பட்டிருக்கும் ரயில்வே ஸ்டேஷன்கள் மோசமான நிலையில் இருக்கிறது. பல ரயில்வே ஸ்டேஷன்களில் லிப்ட் வேலை செய்யவில்லை. கழிவறைகள் மூடப்பட்டிருக்கிறது. மின் விளக்குகள் எரியவில்லை. முழுவதும் இருட்டாக காட்சியளிக்கிறது. இதனால் பயணிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

எனவே இந்த ரயில்வே ஸ்டேஷன்களை மேம்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது அதற்கான பணி விரைவில் தொடங்கவிருக்கிறது. இதை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் (கும்டா), சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ), சென்னை மாநகராட்சி ஆகியவை இணைந்து செய்யவிருக்கிறது. இதில் புதிய என்ஜின், ஏசி கோச், வணிக வளாகங்கள், உணவங்கள், வாகன நிறுத்தம் போன்ற பல்வேறு நவீன வசதிகள் இடம்பெறுகிறது.

மூடி இருக்கும் கழிப்பறை
ஜெரோம்

இதுகுறித்து நம்மிடம் பேசிய சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் சிறப்பு அதிகாரி ஜெயக்குமார், “பறக்கும் ரயில்களை தற்போது தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது. இதில் மத்திய அரசின் நிதியும், மாநில அரசின் நிதியும் இருக்கிறது. இதில், ரயில்வே ஸ்டேஷன் கட்டடங்கள் மிகவும் பழமையாக இருக்கிறது. பயணிகளுக்கு பாதுகாப்பு குறைவாக இருக்கிறது போன்ற பல்வேறு பிரச்னைகள் இருக்கிறது. இதனால் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.

இயங்காத லிப்ட்

இயங்காத லிப்ட்
ஜெரோம்

எனவே இதை எப்படி மேம்படுத்த வேண்டும் என்று யோசிக்கப்பட்டது. அப்போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பறக்கும் ரயில்களை செயல்படுத்தினால் சரியாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டது. இதற்கான பேச்சுவார்த்தை நீண்ட காலமாக நடந்து வந்தது. ஏனெனில் இதில் பணம் முதலீடு செய்ய வேண்டும். மேலும் என்ன மாதிரியான வசதிகளை கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்டவை குறித்து திட்டமிட வேண்டியிருந்தது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiX2h0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL25ld3MvdGFtaWxuYWR1L2NoZW5uYWktc3VidXJiYW4tcmFpbHdheS1zdGF0aW9ucy13aWxsLXNvb24tYmUtcmVub3ZhdGVk0gFpaHR0cHM6Ly93d3cudmlrYXRhbi5jb20vYW1wL3N0b3J5L25ld3MvdGFtaWxuYWR1L2NoZW5uYWktc3VidXJiYW4tcmFpbHdheS1zdGF0aW9ucy13aWxsLXNvb24tYmUtcmVub3ZhdGVk?oc=5