சென்னை ரிச்சி தெருவில் உள்ள 90 கடைகளுக்கு சீல்: என்ன காரணம்? – Chennai Today News

சென்னைச் செய்திகள்

சென்னை ரிச்சி தெருவில் உள்ள 90 கடைகளுக்கு சீல்: என்ன காரணம்?

சென்னை அண்ணாசாலை ரிச்சி தெருவில் உள்ள 90 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள ரிச்சி தெருவில் உள்ள 90 கடைகளுக்கும் பாரிமுனை சாலையில் உள்ள 30 கடைகளுக்கும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளதாகவும், தொழில் வரி செலுத்தாத காரணத்தினால் சீல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொழில் வரி செலுத்தாமல் தொழில் உரிமம் பெறாமல் கடைகளை நடத்தினால் சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919 பிரிவின்படி சீல் வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiRWh0dHBzOi8vd3d3LmNoZW5uYWl0b2RheW5ld3MuY29tL2NoZW5uYWktcmljaGllLXN0cmVldC1zdG9yZXMtc2VhbGVkL9IBSWh0dHBzOi8vd3d3LmNoZW5uYWl0b2RheW5ld3MuY29tL2NoZW5uYWktcmljaGllLXN0cmVldC1zdG9yZXMtc2VhbGVkL2FtcC8?oc=5