சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு அரைநாள் மழை விடுமுறை | half day holiday for schools in 3 districts including chennai – hindutamil.in – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு அரைநாள் மழை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காலையில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்த நிலையில், முற்பகல் 10 மணி முதல் தொடர்மழை பெய்து வருகிறது. குறிப்பாக மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணாசாலை உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை புறநகர் பகுதிகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.12) அரை நாள் விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று (டிச.12) அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வேலூரில் அனைத்து பள்ளிகளிலும் மாலை 3 மணிக்கு வகுப்புகளை முடித்துக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (டிச.12) அரை நாள் மற்றும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMicmh0dHBzOi8vd3d3LmhpbmR1dGFtaWwuaW4vbmV3cy90YW1pbG5hZHUvOTEzMTEzLWhhbGYtZGF5LWhvbGlkYXktZm9yLXNjaG9vbHMtaW4tMy1kaXN0cmljdHMtaW5jbHVkaW5nLWNoZW5uYWkuaHRtbNIBAA?oc=5