அனுமதியின்றி வைக்கப்பட்ட 62 விளம்பர பலகைகள், 33 விளம்பர பதாகைகள் அகற்றம்: சென்னை மாநகராட்சி – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: அனுமதியின்றி வைக்கப்பட்ட 62 விளம்பர பலகைகள், 33 விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியில்லாமல் அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் மண்டல அலுவலரின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் அகற்றப்பட்டு வருகின்றன.

மேலும், மாநகராட்சி அலுவலர்களால் விளம்பரப் பலகைகளின் உறுதித்தன்மை ஆய்வு செய்யப்பட்டு, மழை மற்றும் புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் சாயக்கூடிய நிலையில் உள்ள விளம்பரப் பலகைகளும் உடனடியாக அகற்றப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், (08.12.2022) முதல் (13.12.2022) வரை மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 62 விளம்பரப் பலகைகள் மற்றும் 33 விளம்பரப் பதாகைகள் கண்டறியப்பட்டு, அவை மாநகராட்சி அலுவலர்களால் அகற்றப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விளம்பரப் பலகைகளை அகற்றும் இப்பணியானது தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என சென்னை மாநக்ராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjI2NzPSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyMjY3My9hbXA?oc=5