சென்னையில் ஆடை- அலங்கார பொருட்கள் கண்காட்சி: காரைக்குடி நகரத்தார் சங்கம் ஏற்பாடு – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை அரங்கில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பொருட்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் 90க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் பங்கேற்கவுள்ளனர்.

காரைக்குடி நகரத்தார் சங்கம் பெண்களை சிறுதொழில் தொடங்குவதற்கும் ஊக்கப்படுத்தி வந்தனர். அவர்கள் வழிகாட்டியுள்ள பெண் தொழில்முனைவோர்கள் சென்னை எழும்பூரில் ஆடை, கலை மற்றும் கைவினைப் பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள், நகைகள் போன்றவற்றை கண்காட்சியில் காட்சிப்படுத்த உள்ளார்கள்.

இதற்கு முன்னால் 2019ஆம் ஆண்டு, கண்காட்சி நடைபெற்றபோது 50 தொழில்முனைவோரும், 6 ஆயிரம் பார்வையாளர்களும் பங்கேற்றனர். அதன் பிறகு கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiZ2h0dHBzOi8vdGFtaWwuaW5kaWFuZXhwcmVzcy5jb20vdGFtaWxuYWR1L2thcmFpa3VkaS10cmFkZS1mYWlyLWluLWNoZW5uYWktb24tZGVjZW1iZXItMTh0aC0yMDIyLTU1OTk1MS_SAWxodHRwczovL3RhbWlsLmluZGlhbmV4cHJlc3MuY29tL3RhbWlsbmFkdS9rYXJhaWt1ZGktdHJhZGUtZmFpci1pbi1jaGVubmFpLW9uLWRlY2VtYmVyLTE4dGgtMjAyMi01NTk5NTEvbGl0ZS8?oc=5