சென்னை ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து எருமேலியில் விபத்து; 10 வயது சிறுமி பலி – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

சென்னையில் இருந்து ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து கன்னிமலை எருமேலியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 வயது சிறுமி உயிரிழந்தார். 16 பேர் காயமடைந்துள்ளனர்.

சென்னையில் இருந்து ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து வெள்ளிக்கிழமை கன்னிமலை எருமேலியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 10 வயது சிறுமி உயிரிழந்தார். மேலும், பேருந்தில் இருந்த 16 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்த சிறுமி
தாம்பரத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த விபத்து பிற்பகல் 3.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பேருந்து முண்டக்காயம்-எருமேலி சாலையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவரை உடைத்து பல அடிகள் கீழே பள்ளத்தில் விழுந்தது. விபத்தில் காயமடைந்தவர்கள் காஞ்சிரப்பள்ளியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் உளவர்கள் கோட்டயம் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளனர் தகவல் வெளியாகி உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiiAFodHRwczovL3RhbWlsLmluZGlhbmV4cHJlc3MuY29tL3RhbWlsbmFkdS9jaGVubmFpLWFpeWFwcGEtcGlsZ3JpbXMtdHJhdmVsZWQtYnVzLWFjY2lkZW50LWluLWVydW1lbHktbGVhZHMtMTAteWVhci1vbGQtZ2lybC1kZWF0aC01NTk5ODkv0gGNAWh0dHBzOi8vdGFtaWwuaW5kaWFuZXhwcmVzcy5jb20vdGFtaWxuYWR1L2NoZW5uYWktYWl5YXBwYS1waWxncmltcy10cmF2ZWxlZC1idXMtYWNjaWRlbnQtaW4tZXJ1bWVseS1sZWFkcy0xMC15ZWFyLW9sZC1naXJsLWRlYXRoLTU1OTk4OS9saXRlLw?oc=5