சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் வேலைவாய்ப்பு.. மாதம் ரூ.50000 சம்பளம்..! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

Govt Jobs: இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் சென்னை திருவொற்றியூர், அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை, வரும்  டிசம்பர் 19-ந்தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இப்பணியிடங்களுக்கான கல்வித் தகுதி,  வயது வரம்பு, கட்டணம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவைப் பற்றி இங்கு பாப்போம்.

பணியின் பெயர் காலிப்பணியிடங்கள் சம்பளம் தகுதி
ஓட்டுநர் 1 ரூ.18,500-58600/- 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் 1 ஆண்டு அனுபவம்.
தபேதார் 1 ரூ.15,900-50,400/- 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
உதவி மின் பணியாளர் 1 ரூ.16,600-52,400/- எலக்ரிகல் /வயர்மேன் பிரிவில் ஐடிஐ படிப்பு.
வேதபாராணம் 1 ரூ.15,700-50,000/- தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
காவலர் 2 ரூ.15,900-50,400/- தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
உதவி சுயம்பாகம் 2 ரூ.10,000-31,500/- தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். பிரசாதம் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
உதவி பரிச்சாரகம் 1 ரூ.10,000-31500/- தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். பிரசாதம் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
சமையலர் 1 ரூ.10,000-31,500/- தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமையல் அனுபவம் வேண்டும்.
சமையல் உதவியாளர் 1 ரூ.6,900-21,500/- எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். உணவு தாயார் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
துப்புரவாளர் 1 ரூ.4,200-12,900/- தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 19.12.2022. மாலை 05.45 மணி வரை. ( விண்ணப்பங்கள் அலுவலகத்திற்குச் சென்றிருக்க வேண்டும்)

இந்து சமய அறநிலையத்துறை பணியின் பொது நிபந்தனைகள்: 

தமிழ் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

இறை நம்பிக்கை உடையவராகவும் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும்.

01.07.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதிற்கு உட்பட்டவராகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

Read More : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு ரூ.58000 வரை சம்பளத்தில் வேலை… முழு விவரம் இதோ

விண்ணப்பப் படிவம்:  இதற்கான விண்ணப்பத்தை thiruvottiyurvadivudaiamman.hrce.tn.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தபால் மூலம் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: உதவி ஆணையர் /செயல் அலுவலர். அருள்மிகு தியாகராஜகசுவாமி திருக்கோவில் திருவொற்றியூர், சென்னை – 19 ஆகும்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMifWh0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9uZXdzL2VtcGxveW1lbnQvdGFtaWwtbmFkdS1oaW5kdS1yZWxpZ2lvdXMtZW5kb3dtZW50cy1kZXBhcnRtZW50LXJlY3J1aXRtZW50LWpvYi12YWNhbmN5LTg1NjYyMS5odG1s0gGBAWh0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9hbXAvbmV3cy9lbXBsb3ltZW50L3RhbWlsLW5hZHUtaGluZHUtcmVsaWdpb3VzLWVuZG93bWVudHMtZGVwYXJ0bWVudC1yZWNydWl0bWVudC1qb2ItdmFjYW5jeS04NTY2MjEuaHRtbA?oc=5