சென்னை – மங்களூரு ரயில் வழக்கம்போல் இயங்கும் – தினமணி

சென்னைச் செய்திகள்

கோப்புப்படம்

சென்னையில் இருந்து மங்களூா் செல்லும் ரயில் தாமதமாக இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வழக்கம் போல் இயங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்படும் தினசரி ரயில் (வண்டி எண்: 12601) மறுநாள் பகல் 12.10 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் சென்றடையும். இந்த ரயில் டிச.17, 24, 31 ஆகிய தேதிகளில் 1 மணி நேரம் 15 நிமிடம் தாமதமாகப் புறப்படும் என டிச.13 -ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

தற்போது இந்தத் தேதிகளில் வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiswNodHRwczovL3d3dy5kaW5hbWFuaS5jb20vYWxsLWVkaXRpb25zL2VkaXRpb24tY2hlbm5haS9jaGVubmFpLzIwMjIvZGVjLzE2LyVFMCVBRSU5QSVFMCVBRiU4NiVFMCVBRSVBOSVFMCVBRiU4RCVFMCVBRSVBOSVFMCVBRiU4OC0tLSVFMCVBRSVBRSVFMCVBRSU5OSVFMCVBRiU4RCVFMCVBRSU5NSVFMCVBRSVCMyVFMCVBRiU4MiVFMCVBRSVCMCVFMCVBRiU4MS0lRTAlQUUlQjAlRTAlQUUlQUYlRTAlQUUlQkYlRTAlQUUlQjIlRTAlQUYlOEQtJUUwJUFFJUI1JUUwJUFFJUI0JUUwJUFFJTk1JUUwJUFGJThEJUUwJUFFJTk1JUUwJUFFJUFFJUUwJUFGJThEJUUwJUFFJUFBJUUwJUFGJThCJUUwJUFFJUIyJUUwJUFGJThELSVFMCVBRSU4NyVFMCVBRSVBRiVFMCVBRSU5OSVFMCVBRiU4RCVFMCVBRSU5NSVFMCVBRiU4MSVFMCVBRSVBRSVFMCVBRiU4RC0zOTY3ODA0Lmh0bWzSAbADaHR0cHM6Ly9tLmRpbmFtYW5pLmNvbS9hbGwtZWRpdGlvbnMvZWRpdGlvbi1jaGVubmFpL2NoZW5uYWkvMjAyMi9kZWMvMTYvJUUwJUFFJTlBJUUwJUFGJTg2JUUwJUFFJUE5JUUwJUFGJThEJUUwJUFFJUE5JUUwJUFGJTg4LS0tJUUwJUFFJUFFJUUwJUFFJTk5JUUwJUFGJThEJUUwJUFFJTk1JUUwJUFFJUIzJUUwJUFGJTgyJUUwJUFFJUIwJUUwJUFGJTgxLSVFMCVBRSVCMCVFMCVBRSVBRiVFMCVBRSVCRiVFMCVBRSVCMiVFMCVBRiU4RC0lRTAlQUUlQjUlRTAlQUUlQjQlRTAlQUUlOTUlRTAlQUYlOEQlRTAlQUUlOTUlRTAlQUUlQUUlRTAlQUYlOEQlRTAlQUUlQUElRTAlQUYlOEIlRTAlQUUlQjIlRTAlQUYlOEQtJUUwJUFFJTg3JUUwJUFFJUFGJUUwJUFFJTk5JUUwJUFGJThEJUUwJUFFJTk1JUUwJUFGJTgxJUUwJUFFJUFFJUUwJUFGJThELTM5Njc4MDQuYW1w?oc=5