தாயம் விளையாட்டில் தோற்கடித்தவரை கொலை செய்தவருக்கு ஆயுள்தண்டனை – சென்னை கோர்ட்டு தீர்ப்பு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

சென்னை சிந்தாதிரிபேட்டையை சேர்ந்தவர் தனசேகர். கடந்த 2015-ம் ஆண்டு இவர், நண்பர்களுடன் தாயம் விளையாடிய போது சிந்தாதிரிபேட்டையைச் சேர்ந்த ஆனந்தன்(வயது 45) என்பவரை தோற்கடித்துள்ளார்.

இதனால் அவர்களுக்கு இடையே விரோதம் ஏற்பட்டது. இந்த விரோதம் காரணமாக கடந்த 18.9.2015 அன்று சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையில் தனசேகர் மது அருந்தி கொண்டிருந்த போது அங்கு சென்ற ஆனந்தன் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தனை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை 18-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி ஆபிரகாம் லிங்கன் முன்னிலையில் நடந்தது. அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் ஜெய்சங்கர் ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ஆனந்தன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Related Tags :

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMinAFodHRwczovL3d3dy5kYWlseXRoYW50aGkuY29tL05ld3MvU3RhdGUvbGlmZS1pbXByaXNvbm1lbnQtZm9yLXRoZS1tdXJkZXJlci1vZi10aGUtcGVyc29uLXdoby1kZWZlYXRlZC1oaW0taW4tdGhlLWdhbWUtb2YtdGhheWFtLWNoZW5uYWktY291cnQtdmVyZGljdC04NTg5MTnSAaABaHR0cHM6Ly93d3cuZGFpbHl0aGFudGhpLmNvbS9hbXAvTmV3cy9TdGF0ZS9saWZlLWltcHJpc29ubWVudC1mb3ItdGhlLW11cmRlcmVyLW9mLXRoZS1wZXJzb24td2hvLWRlZmVhdGVkLWhpbS1pbi10aGUtZ2FtZS1vZi10aGF5YW0tY2hlbm5haS1jb3VydC12ZXJkaWN0LTg1ODkxOQ?oc=5