நிலத்தடி நீரை அதிகரிக்க பேவா் பிளாக் சாலை: சென்னை மாநகராட்சி – தினமணி

சென்னைச் செய்திகள்

நிலத்தடி நீரை அதிகரிக்கும் வகையில் ரூ. 1.71 கோடி செலவில் பேவா் பிளாக் சாலை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மூலம் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5,270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்படுகின்றன. இதில், பேருந்து சாலைகள் தாா் சாலைகளாகவும் உட்புற சாலைகள் தாா் மற்றும் கான்கிரீட் சாலைகளாகவும் உள்ளன. தற்போது 2.78 கி.மீ நீளத்துக்கு ரூ.1.71 கோடி செலவில் பேவா் பிளாக் சாலை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இந்தச் சாலைகள் மணலி மண்டலத்தில் 554 மீ நீளத்தில் ரூ.32 லட்சம் செலவிலும், ராயபுரம் மண்டலத்தில் 165 மீ நீளத்தில் ரூ. 6 லட்சம் செலவிலும், வளசரவாக்கம் மண்டலத்தில் 219 மீ நீளத்தில் ரூ. 19 லட்சம் செலவிலும், அடையாறு மண்டலத்தில் 180 மீ நீளத்தில் ரூ.11.23 லட்சம் செலவிலும், பெருங்குடி மண்டலத்தில் 1,662 மீ நீளத்தில் ரூ.1.01 கோடி செலவிலும் அமைக்கப்படவுள்ளன.

மழை நேரங்களில் தண்ணீா் பேவா் பிளாக் சாலைகளில் முழுவதுமாக இறங்கும். இதன்மூலம் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீா் அதிகரிக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMisgRodHRwczovL3d3dy5kaW5hbWFuaS5jb20vYWxsLWVkaXRpb25zL2VkaXRpb24tY2hlbm5haS9jaGVubmFpLzIwMjIvZGVjLzE1LyVFMCVBRSVBOCVFMCVBRSVCRiVFMCVBRSVCMiVFMCVBRSVBNCVFMCVBRiU4RCVFMCVBRSVBNCVFMCVBRSU5RiVFMCVBRSVCRi0lRTAlQUUlQTglRTAlQUYlODAlRTAlQUUlQjAlRTAlQUYlODgtJUUwJUFFJTg1JUUwJUFFJUE0JUUwJUFFJUJGJUUwJUFFJTk1JUUwJUFFJUIwJUUwJUFFJUJGJUUwJUFFJTk1JUUwJUFGJThEJUUwJUFFJTk1LSVFMCVBRSVBQSVFMCVBRiU4NyVFMCVBRSVCNSVFMCVBRSVCRSVFMCVBRiU4RC0lRTAlQUUlQUElRTAlQUUlQkYlRTAlQUUlQjMlRTAlQUUlQkUlRTAlQUUlOTUlRTAlQUYlOEQtJUUwJUFFJTlBJUUwJUFFJUJFJUUwJUFFJUIyJUUwJUFGJTg4LSVFMCVBRSU5QSVFMCVBRiU4NiVFMCVBRSVBOSVFMCVBRiU4RCVFMCVBRSVBOSVFMCVBRiU4OC0lRTAlQUUlQUUlRTAlQUUlQkUlRTAlQUUlQTglRTAlQUUlOTUlRTAlQUUlQjAlRTAlQUUlQkUlRTAlQUUlOUYlRTAlQUYlOEQlRTAlQUUlOUElRTAlQUUlQkYtMzk2NzEzMS5odG1s0gGvBGh0dHBzOi8vbS5kaW5hbWFuaS5jb20vYWxsLWVkaXRpb25zL2VkaXRpb24tY2hlbm5haS9jaGVubmFpLzIwMjIvZGVjLzE1LyVFMCVBRSVBOCVFMCVBRSVCRiVFMCVBRSVCMiVFMCVBRSVBNCVFMCVBRiU4RCVFMCVBRSVBNCVFMCVBRSU5RiVFMCVBRSVCRi0lRTAlQUUlQTglRTAlQUYlODAlRTAlQUUlQjAlRTAlQUYlODgtJUUwJUFFJTg1JUUwJUFFJUE0JUUwJUFFJUJGJUUwJUFFJTk1JUUwJUFFJUIwJUUwJUFFJUJGJUUwJUFFJTk1JUUwJUFGJThEJUUwJUFFJTk1LSVFMCVBRSVBQSVFMCVBRiU4NyVFMCVBRSVCNSVFMCVBRSVCRSVFMCVBRiU4RC0lRTAlQUUlQUElRTAlQUUlQkYlRTAlQUUlQjMlRTAlQUUlQkUlRTAlQUUlOTUlRTAlQUYlOEQtJUUwJUFFJTlBJUUwJUFFJUJFJUUwJUFFJUIyJUUwJUFGJTg4LSVFMCVBRSU5QSVFMCVBRiU4NiVFMCVBRSVBOSVFMCVBRiU4RCVFMCVBRSVBOSVFMCVBRiU4OC0lRTAlQUUlQUUlRTAlQUUlQkUlRTAlQUUlQTglRTAlQUUlOTUlRTAlQUUlQjAlRTAlQUUlQkUlRTAlQUUlOUYlRTAlQUYlOEQlRTAlQUUlOUElRTAlQUUlQkYtMzk2NzEzMS5hbXA?oc=5