பள்ளிகளில் இலவச சானிட்டரி நாப்கின்கள்: சென்னை மாநகராட்சியின் புது முயற்சி – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை பள்ளிகளில் VI-XII வகுப்பு மாணவர்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் முயற்சியை மேயர் ஆர் பிரியா தொடங்கி வைத்திருக்கிறார்.

சென்னை பள்ளிகளில் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாணவருக்கும் இரண்டு மாதங்களுக்கு 20 சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும்.

இதனுடன், இரண்டு மாதங்களுக்கு கூடுதலாக 100 நாப்கின்கள் அவசரகாலத்தில் பள்ளிகளில் தனி அலமாரி ஒதுக்கி சேமித்து வைக்கப்படும்.

4.67 கோடி செலவில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், பெருநகர சென்னை மாநகராட்சியின் (ஜிசிசி) கீழ் வரும் 281 பள்ளிகளில் மொத்தம் 25,474 மாணவர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 32 மேல்நிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 119 தொடக்கப் பள்ளிகள் அடங்கும்.

சென்னையில் உள்ள தொண்டியார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில் மூன்று ஆண்டுகளுக்கு இம்முயற்சி செயல்படுத்தப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMihAFodHRwczovL3RhbWlsLmluZGlhbmV4cHJlc3MuY29tL3RhbWlsbmFkdS9mcmVlLXNhbml0YXJ5LW5hcGtpbnMtZm9yLXNjaG9vbC1zdHVkZW50cy1pbml0aWF0ZWQtYnktZ3JlYXRlci1jaGVubmFpLWNvcnBvcmF0aW9uLTU1OTI0Ny_SAQA?oc=5