அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை… – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

தென்கிழக்கு அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியிருந்தார்.

மேலும், இது வரும் தினங்களில் மேற்கு-வடமேற்கு திசையில நகர்ந்து இந்திய கடற்பகுதிகளை விட்டு விலகிச்செல்லும் என்றும் அந்தமான் கிழக்குப்பகுதியில் இருந்து நாளை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நகர்ந்து அந்தமான் கடல் பகுதிகளின் தெற்குப்பகுதிகளில் நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அடுத்த 24 மணி நேரங்களை பொறுத்தவரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டது. வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அரபிக்கடலில் கேரள- கர்நாடக கடலோரப் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கே வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related Tags :

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMipgFodHRwczovL3d3dy5kYWlseXRoYW50aGkuY29tL05ld3MvU3RhdGUvbmV3LWxvdy1wcmVzc3VyZS1hcmVhLWluLWFyYWJpYW4tc2VhLWNoYW5jZS1vZi1tb2RlcmF0ZS1yYWluLWluLXRhbWlsLW5hZHUtZm9yLTUtZGF5cy1jaGVubmFpLW1ldGVvcm9sb2dpY2FsLWRlcGFydG1lbnQtODU2OTM40gGqAWh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vYW1wL05ld3MvU3RhdGUvbmV3LWxvdy1wcmVzc3VyZS1hcmVhLWluLWFyYWJpYW4tc2VhLWNoYW5jZS1vZi1tb2RlcmF0ZS1yYWluLWluLXRhbWlsLW5hZHUtZm9yLTUtZGF5cy1jaGVubmFpLW1ldGVvcm9sb2dpY2FsLWRlcGFydG1lbnQtODU2OTM4?oc=5