குறைந்த கல்வித் தகுதி போதும்: சென்னை திருவொற்றியூர் கோயிலில் வேலைவாய்ப்பு – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

இந்து சமய அறநிலையத்துறைக்கு கீழ் செயல்பட்டு வரும் சென்னை திருவொற்றியூர், அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் பல்வேறு காலிப்பணியிடங்கள் இருப்பதால் அதற்கேற்ற வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளனர்.

வேலைக்கான விண்ணப்பங்களை, வருகின்ற டிசம்பர் 19ஆம் தேதி மாலை 5 மணிக்குள் (விண்ணப்பங்கள் அலுவலகத்திற்குச் சென்றிருக்க வேண்டும்) அனுப்பவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்து சமய அறநிலையத்துறை பணிக்கான பொது நிபந்தனைகள் என்னவென்றால், “இறை நம்பிக்கை உடையவராகவும் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும். 01.07.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதிற்கு உட்பட்டவராகவும் விண்ணப்பிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும், வேலைக்கான விண்ணப்பத்தை thiruvottiyurvadivudaiamman.hrce.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தபால் மூலம் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: உதவி ஆணையர் /செயல் அலுவலர். அருள்மிகு தியாகராஜகசுவாமி திருக்கோவில் திருவொற்றியூர், சென்னை – 19.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMihQFodHRwczovL3RhbWlsLmluZGlhbmV4cHJlc3MuY29tL3RhbWlsbmFkdS90YW1pbG5hZHUtaGluZHUtcmVsaWdpb3VzLWFuZC1jaGFyaXRhYmxlLWVuZG93bWVudHMtZGVwYXJ0bWVudC1qb2Itb3Bwb3J0dW5pdHktMjAyMi01NjAwMDYv0gGKAWh0dHBzOi8vdGFtaWwuaW5kaWFuZXhwcmVzcy5jb20vdGFtaWxuYWR1L3RhbWlsbmFkdS1oaW5kdS1yZWxpZ2lvdXMtYW5kLWNoYXJpdGFibGUtZW5kb3dtZW50cy1kZXBhcnRtZW50LWpvYi1vcHBvcnR1bml0eS0yMDIyLTU2MDAwNi9saXRlLw?oc=5